கண்ணீர் மல்க விடைபெற்ற ஜாம்பவான் ஜூலன் கோஸ்வாமி – அவர் படைத்துள்ள சாதனைகளின் பட்டியல்

Jhulan Goswami
- Advertisement -

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய மகளிரணி அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றது. அதில் முதலாவதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2 – 1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து துவங்கிய ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்த இந்தியா ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றியது. அதனால் அத்தொடரின் சம்பிரதாய கடைசி போட்டி செப்டம்பர் 24 ஆம் தேதியான நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 45.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.

அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 50 (79) ரன்களும் தீப்தி சர்மா 68* (106) ரன்களும் எடுத்தனர். அதை துரத்திய இங்கிலாந்து ஆரம்பம் முதலே இந்தியாவின் தரமான பந்துவீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 43.3 ஓவரில் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக சார்லி டீன் 47 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ரேணுகா சிங் 4 விக்கெட்களை எடுத்தார். அதனால் 16 ரன்கள் வித்யாசத்தில் வென்ற இந்தியா 3 – 0 (3) என்ற கணக்கில் இங்கிலாந்தை முதல் முறையாக அதன் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்து கோப்பையை முத்தமிட்டது.

- Advertisement -

விடைபெற்ற ஜாம்பவான்:
முன்னதாக இப்போட்டியுடன் இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர அனுபவ வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இவர் கிரிக்கெட் மீதான காதலால் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தலாக செயல்பட்டு கடந்த 2002ஆம் ஆண்டு இந்தியாவுக்கு அறிமுகமானார். அப்போது முதல் வேகப்பந்து வீச்சாளராக தனது பயணத்தை துவங்கிய இவர் ரசிகர்களால் “சக்டா எக்ஸ்பிரஸ்” என போற்றும் அளவுக்கு பெரும்பாலான போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு ஏராளமான விக்கெட்டுகளை எடுத்து நிறைய சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார்.

இந்தியா போன்ற பெண்ணாதிக்கம் குறைவான நாட்டில் பார்மையும், காயங்களையும், விமர்சனங்களையும், சவால்களையும் கடந்து 3 வகையான கிரிக்கெட்டிலும் ஜாம்பவானாக செயல்பட்ட அவர் இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் கிரிக்கெட் விளையாடும் அத்தனை இளம் வீராங்கனைகளுக்கும் ரோல் மாடலாக தன்னை நிரூபித்தார். தற்போது 39 வயதாகும் அவர் இப்போதும் அதே பழைய வேகத்துடன் பந்துவீசி நேற்றைய கடைசி போட்டியில் கூட 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை எடுத்து துடிப்புடன் செயல்படுகிறார்.

- Advertisement -

கண்ணீர் மல்க:
ஆனாலும் அடுத்த தலைமுறைக்கு வழிவிடும் வகையில் ஓய்வு பெற்றுள்ள அவருக்கு நேற்றைய போட்டி துவங்கும் போது கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தின் நடுவே மேஜை நாற்காலியின் மேலே ஏறி நின்று ரசிகர்களின் பாராட்டுகளைப் பெறும் கௌரவத்தை இங்கிலாந்து வாரியம் செய்தது. மேலும் அவரது சாதனையை பாராட்டி பிசிசிஐ சார்பில் நினைவு பரிசு வழங்கிய போது இந்திய வீராங்கனைகள் அனைவரும் பிரியா மனதுடன் அவருக்கு விடை கொடுத்தனர்.

குறிப்பாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் அவரை பிரியப் போவதை நினைத்து உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் மல்க விடை கொடுத்தார். அதைவிட நேற்றைய போட்டியில் பேட்டிங் செய்ய களமிறங்கிய போது இங்கிலாந்து வீராங்கனைகள் இருபுறமும் நின்று அவருக்கு கை தட்டி வரவேற்பு கொடுத்தது இந்திய ரசிகர்களை நெகிழ வைத்தது. மேலும் இறுதியில் இந்திய வீராங்கனைகள் அவரை தோள் மீது சுமந்து மைதானத்தை வலம் வந்தனர். மேலும் அவருக்கு சச்சின், விராட், கங்குலி போன்ற இந்திய ப்ரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். இத்தனை கவுரவத்தை பெருமளவுக்கு ஜாம்பவானாக ஜூலன் கோஸ்சாமி படைத்த முக்கிய சாதனைகளை பார்ப்போம்:

- Advertisement -

1. முதலில் சச்சின் டெண்டுல்கர், மிதாலி ராஜ் ஆகியோருக்குப் பின் சர்வதேச கிரிக்கெட்டில் 20 வருடங்கள் விளையாடிய 3வது இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

2. சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர் என்ற உலக சாதனை பட்டியலில் அவர் முதலிடத்தில் உள்ளர். அந்த பட்டியல்:
1. ஜுலன் கோஸ்வமி : 355
2. கேத்ரின் ப்ரண்ட் : 329
3. எலிஸ் பெரி : 313

- Advertisement -

3. மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளராகவும் அவர் சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஜுலன் கோஸ்வாமி : 255
2. சப்னிம் இஸ்மாயில் : 191

4. அத்துடன் ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீராங்கனை என்ற சாதனையும் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஜூலன் கோஸ்வாமி : 43
2. லின் பியூஸ்டன் : 39

5. மேலும் மகளிர் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடிய வீராங்கனை என்ற உலக சாதனையும் – அதிக வயதில் விளையாடிய இந்திய வீராங்கனை என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.

6. அதுபோக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஓவர்களை பந்து வீசிய வீராங்கனை (2260.2 ஓவர்கள்) என்ற உலக உலக சாதனையை படைத்துள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 10000 பந்துகளை வீசிய முதல் வீராங்கனையாகவும் சரித்திரம் படைத்துள்ளார்.

இதையும் படிங்க : தவறுதலா அப்படி ஒரு பந்தை போட்டா கூட ரோஹித் சிக்ஸ் அடிச்சிருவாரு – ஆஷிஷ் நெஹ்ரா வெளிப்படை

7. அத்துடன் ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீராங்கனை (2007) அர்ஜுனா விருது (2010) பத்மஸ்ரீ விருது (2012) ஆகிய விருதுகளை வென்றுள்ள அவர் இந்தியா கண்டெடுத்த மகத்தான வீராங்கனையாக திகழ்வது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையான அம்சமாகும்.

Advertisement