நைட் கிளப் பார்ட்டி..! ஓட்டலுக்கு லேட்..! விளையாட ஒரு வருடம் தடை.! 20% அபராதம்.! மன்னிப்பு கேட்ட ‘Jeffrey Vandersay’ .!

Jeffrey-Vandersay-srilanka
Advertisement

கிரிக்கெட் வீரர்கள் தவறு செய்தால் அதற்கு பாலமாகவே இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் மூன்று வீரர்களுக்கு கிரிக்கெட்டில் இருந்து ஒராண்டு தடை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இலங்கை வீரர் ஒருவர் ’நைட் கிளப்பிற்கு சென்று தாமதமாக அறைக்கு திரும்பியதால் ஒராண்டு தடையை பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Jeffrey-Vandersay

கடந்த மே மாதம் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியது. இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி செயின்ட் லூசியாவில் நடந்த போது, ஓட்டல் அறையில் இருந்து இலங்கை அணியின் ஜெஃப்ரி வாண்டர்சே அடுத்தநாள் ஹோட்டலுக்கு வராததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

- Advertisement -

பின்னர் அடுத்த நாள் ஓட்டலுக்கு தாமதமாக வந்து சேர்ந்த வாண்டர்சே இதுகுறித்து விளக்கமளிக்கையில், இரவில் ‘நைட்கிளப்’ சென்று விட்டு ஓட்டலுக்கு திரும்ப வரும் போது வழி தெரியாததால் தாமதமாகி விட்டதாக கூறியுதுடன், தாமதமாக வந்ததற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார்.ஆனால், ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் அவர் கூறிய காரணத்தை ஏற்றுக்கொள்ளாத இலங்கை கிரிக்கெட் வாரியம் அவரை இலங்கைக்கு திருப்பி அனுப்பியது.

அவரது ஒழுகீன்மை செயலுக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது அவருக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் சர்வதேச போட்டிகளில் விளையாட ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவரது ஒப்பந்த ஊதியத்தில் இருந்து 20 சதவீத அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement