IND vs BAN : கம்பேக் கொடுத்த போட்டியிலேயே அசத்திய ஜெய்தேவ் உனட்கட் – இதுதான் முதன்முறையாம்

Jaydev-Unadkat
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று டிசம்பர் 22-ஆம் தேதி டாக்கா மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் சாகிப் அல் ஹசன் பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய வங்கதேச அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 73.5 ஓவர்களில் அனைத்து விக்கெடுகளையும் இழந்து 227 ரன்களை மட்டுமே குவித்தது.

Ashwin

- Advertisement -

இந்த முதல் இன்னிங்சில் வங்கதேச அணி சார்பாக அதிகபட்சமாக மொமினுள் ஹக் 84 ரன்கள் குவித்தார். அவரை தவிர்த்து வேறு எந்த வீரரும் 30 ரன்களை கூட எட்டவில்லை என்பதனால் வங்கதேச அணி 227 ரன்களுக்கு சுருண்டது.

இந்திய அணி சார்பாக உமேஷ் யாதவ் 4 விக்கெட்களையும், தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் 4 விக்கெட்டுகளையும், உனக்கட் 2 விக்கெட்களையும் வீழ்த்தினார். பின்னர் தங்களது முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணியானது முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் குவித்து களத்தில் உள்ளது.

Jaydev Unadkat

இன்னும் போட்டி நான்கு நாட்கள் மிஞ்சியுள்ள வேளையில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜெய்தேவ் உனட்கட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

கடந்த 2010-ஆண்டு தோனி தலைமையிலான டெஸ்ட் கிரிக்கெட் அணியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அறிமுகமான உனட்கட் அந்த போட்டியில் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. பின்னர் அந்த போட்டியோடு ஓரங்கட்டப்பட்ட அவர் 12 ஆண்டுகள் கழித்து தற்போது தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார்.

இதையும் படிங்க : IND vs BAN : நல்ல சேன்ஸ் கிடைச்சிருக்கு இதையும் யூஸ் பண்ணலனா – கே.எல் ராகுல் காலி தான்

இந்நிலையில் இன்றைய போட்டியில் வங்கதேச அணியின் துவக்க வீரரான ஜாகிர் ஹசானை வீழ்த்திய அவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கட்டாக அவரை வீழ்த்தினார். பின்னர் ரஹீமையும் அவர் வீழ்த்தி இந்த போட்டியில் 16 ஓவர்கள் வீசி 2 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

Advertisement