இந்த சீசன் முழுவதும் ஹார்டிக் பாண்டியா பந்துவீசாததன் காரணம் இதுதான் – ஜெயவர்த்தனே விளக்கம்

Jayawardene
- Advertisement -

மும்பை அணியின் முன்னணி இளம் ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா கடந்த சில ஆண்டுகளாகவே பந்து வீசாமல் இருந்து வருகிறார். குறிப்பாக 2019ஆம் ஆண்டு அவருக்கு முதுகுப்பகுதியில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பிறகு இதுவரை சுமார் 41 போட்டிகளில் 46 ஓவர்களை மட்டுமே அவர் வீசியுள்ளார். தொடர்ந்து அவர் பந்து வீசாமல் இருந்தால் இந்திய அணியில் இருந்து நீக்கப்படுவார் என்று கூறப்பட்ட வேளையில் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் சில ஓவர்களை வீசினார்.

pandya 1

- Advertisement -

ஆனால் அப்போதும் அவரால் முழுமையாக பந்து வீச முடியவில்லை. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரிலும் பாண்டியா இதுவரை பந்து வீசாமல் இருந்து வருகிறார். அடுத்து வரும் டி20 உலக கோப்பையில் அவர் ஆல்-ரவுண்டராக விளையாட இருப்பதால் நிச்சயம் பந்து வீச வேண்டிய அவசியம் இருக்கும்.

இவ்வேளையில் பாண்டியா தொடர்ச்சியாக பந்து வீசாமல் இருந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய மும்பை அணியின் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே கூறுகையில் : அவர் இந்த ஐபிஎல் தொடர் முழுவதிலுமே பந்துவீச மாட்டார். ஏனெனில் தற்போது அவர் பந்துவீசும் அளவிற்கு முழு உடற்திறனுடன் இல்லை.

pandya 1

அவரை பந்துவீச அழுத்தம் கொடுத்தால் அவருடைய பேட்டிங் திறன் பாதிக்கும். அது மட்டுமின்றி அவருக்கு சில பிரச்சனைகளும் வந்து விட வாய்ப்புள்ளது. எனவே அவரை பந்து வீசாமல் வைத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார். மேலும் அடுத்து உலக கோப்பை வர இருப்பதால் அவராக தயாராகும் வரை அவரை நாங்கள் பந்துவீச கட்டாயப்படுத்த மாட்டோம் என கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 வேர்ல்டு கப்புக்கு தேர்வான வீரரை அணியில் இருந்து நீக்கிய ரோகித் சர்மா – ஏன் இப்படி பண்றீங்க ?

மேலும் மும்பை அணி நிர்வாகமும் அதையேதான் யோசித்து உள்ளதாகவும் ஜெயவர்த்தனே தெளிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இப்போது பந்துவீசி அவர் காயத்தை மேலும் பெரிதாக்காமல் அவரது காயம் குணமடையும் வரை காத்திருந்து பிறகு அவர் தயாராகி பந்து வீசுவார் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement