சி.எஸ்.கே-க்கு எதிரான போட்டியில் ஏன் ஹார்டிக் பாண்டியா விளையாடவில்லை – மும்பை கோச் விளக்கம்

Jayawardene
- Advertisement -

ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி நேற்று துபாய் மைதானத்தில் கோலாகலமாக துவங்கியது. இந்த முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பொல்லார்டு தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் மும்பை அணியின் முக்கிய வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் விளையாடவில்லை. அவர்கள் இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

pandya

- Advertisement -

இவர்கள் இருவரும் இல்லாத மும்பை அணியில் பேட்டிங் டெப்த் இல்லாத காரணத்தினால் நேற்றைய போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் போட்டியின் இடையே மும்பை அணியின் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே இந்த சி.எஸ்.கே அணிக்கு எதிரான போட்டியில் ஏன் ஹர்டிக் பாண்டியா விளையாடவில்லை என்பது குறித்து தனது கருத்தினை பகிர்ந்து கொண்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : ஹார்டிக் பாண்டியா பயிற்சியில் கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்டார். இருப்பினும் அப்போது ஏற்பட்ட சிறிய தசைப்பிடிப்பு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாங்கள் இந்த போட்டியில் அவரை விளையாட வைக்கவில்லை. இன்னும் சிறிது நாட்கள் அவர் ஓய்வு எடுத்தால் நிச்சயம் அடுத்த போட்டிக்கு சிறப்பாக தயாராகி விடுவார் என்று ஜெயவர்த்தேனே குறிப்பிட்டார்.

pandya 1

இதன் காரணமாக நிச்சயம் ஹார்டிக் பாண்டியா அடுத்த போட்டியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. அதேபோன்று இங்கிலாந்து தொடரை முடித்துக்கொண்டு நேரடியாக அமீரகம் பயணித்த ரோஹித்தும் தற்போது முன்னெச்சரிக்கை காரணமாக விளையாடவில்லை என்றும் இன்னும் சில தினங்கள் அவருக்கு ஓய்வு கொடுத்தால் அடுத்த போட்டியில் இருந்து பங்கேற்பார் என்றும் அவர் கூறியிருந்தார்.

rohith 1

துவக்கத்தில் வலுவாக இருந்த மும்பை அணி இறுதி கட்டத்தில் பந்துவீச்சில் சில ரன்களை வாரி வழங்கியதும், பேட்டிங்கின் போது சரியான பாட்னர்ஷிப்பும் இல்லாததே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி பெற்ற இந்த தோல்வி ரசிகர்களிடையே பெரும் கேலியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement