இந்திய அணியின் பயிற்சியாளராக ஜெயவர்த்தினேவுக்கு பிரகாசமான வாய்ப்பு – காரணம் இதுதான்

Jayawardena

இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் உலகக் கோப்பைத் தொடரோடு முடிவுக்கு வந்தது. இதனை அடுத்து வரவிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்காக அவருக்கு 45 நாட்கள் மேலும் பதவி காலம் நீட்டிக்கப்பட்டது.

ravi

இந்நிலையில் பிசிசிஐ புதிய பயிற்சியாளரை நியமிக்க விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் வரும் 30ஆம் தேதி வரை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டு . இந்நிலையில் தற்போது இலங்கை அணியின் முன்னாள் வீரரான ஜெயவர்த்தனே இந்திய அணியின் பயிற்சியாளராக அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

அதன் காரணம் யாதெனில் : பல ஆண்டுகள் கிரிக்கெட் அனுபவம் கொண்ட ஜெயவர்த்னே தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பயிற்சியாளராக உள்ளார். மேலும் தற்போது இந்திய அணிக்கு ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மாவை கேப்டனாக மாற்றும் திட்டம் உள்ளதால் ஏற்கனவே ரோகித் சர்மாவுடன் இருக்கும் நெருக்கம் காரணமாக ஜெயவர்த்தனே இந்திய அணிக்கு பயிற்சியாளராக வாய்ப்பு அதிகம்.

Rohith

ஜெயவர்தனே மற்றும் ரோகித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு முறை கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய அணியில் உள்ள இளம் வீரர்கள் அனைவரிடமும் ஜெயவர்த்தனேவின் உறவு நெருக்கமாகவே உள்ளது. அவரின் பயிற்சி இந்திய அணியின் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது .அதன் காரணமாக அவர் பயிற்சியாளராக பிரகாசமான வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.