ரவீந்திர ஜடேஜாவிற்கு பதிலாக ஜெயந்த் யாதவை சேர்க்க என்ன காரணம் தெரியுமா ? – அவரது ஸ்பெஷல் என்ன?

Jayant-2
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பை மைதானத்தில் தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. மழை காரணமாக இரண்டரை மணி நேரம் தாமதமாக துவங்கியுள்ள இந்த போட்டி தற்போது உணவு இடைவேளைக்குப் பிறகு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் காயம் காரணமாக இஷாந்த் ஷர்மா, ரஹானே மற்றும் ஜடேஜா ஆகியோர் இடம்பெறவில்லை.

jayant

- Advertisement -

அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களாக இஷாந்த் சர்மாவிற்கு பதிலாக முகமத் சிராஜ், ரஹானேவிற்கு பதிலாக கேப்டனாக விராட் கோலியும், ஜடேஜாவுக்கு பதிலாக ஜெயந்த் யாதவும் விளையாடுகின்றனர். இதில் ஆல் ரவுண்டர் ஜடேஜவிற்கு பதிலாக ஒரு பேட்ஸ்மேன் அணியில் சேர்க்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் அணியில் ஜெயந்த் யாதவ் இடம் பெற்றுள்ளார்.

அப்படி ஜடேஜாவுக்கு பதிலாக ஜெயந்த் யாதவ் இடம்பெற என்ன காரணம் என்பது குறித்த தகவலை நாங்கள் இங்கே உங்களுக்காக வழங்கியுள்ளோம். அதன்படி 31 வயதான டெல்லி வீரர் ஜெயந்த் யாதவ் வலதுகை ஆஃப் ஸ்பின்னர். கடந்த 2016ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமான அவர் 2016 ஆண்டு முதல் 17 ஆம் ஆண்டு வரை 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

jayant 1

மேலும் பேட்டிங்கிலும் ஓரளவு கைகொடுக்கும் அவர் ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதம் அடித்துள்ளார். அந்த இரண்டுமே இங்கிலாந்து அணிக்கு எதிராக வந்தவை. 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிராக விராட் கோலி 200 ரன்கள் அடித்த போட்டியில் முக்கியமான பார்ட்னராக இருந்த ஜெயந்த் யாதவ் 104 ரன்கள் குவித்தார். இப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் விளையாடியுள்ள 4 போட்டிகளிலேயே ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதம் அடித்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : இரண்டாவது டெஸ்ட் : தாமதமாக துவங்கிய போட்டி. இந்தியா டாஸ் வென்று பேட்டிங் – 3 மாற்றங்கள்

சுழற்பந்து வீச்சாளரான அவர் பேட்டிங்கிலும் ஓரளவு கை கொடுப்பார் என்பதன் காரணமாகவே தற்போது ஜடேஜாவிற்கு பதிலாக அவர் அணியில் விளையாடுகிறார். 2017 ஆம் ஆண்டிற்குப் பிறகு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கழித்து தற்போது அவருக்கு விளையாடும் பிளேயிங் லெவனில் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement