இரண்டாவது டெஸ்ட் : தாமதமாக துவங்கிய போட்டி. இந்தியா டாஸ் வென்று பேட்டிங் – 3 மாற்றங்கள்

Williamson
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலை மும்பை வான்கடே மைதானத்தில் துவங்க இருந்தது. இந்திய நேரப்படி காலை ஒன்பது முப்பது மணிக்கு துவங்க வேண்டிய இந்த போட்டி கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக மைதானம் ஈரப்பதமாக இருந்ததனால் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் தாமதமாக தற்போது துவங்க உள்ளது. முதல் நாள் ஆட்டம் தற்போது உணவு இடைவேளைக்கு பிறகு துவங்கவுள்ளது.

wankhede

- Advertisement -

சில நிமிடங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்த டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக தேர்வு செய்தார். நியூசிலாந்து அணி சார்பாக கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகியுள்ளதால் அந்த அணியின் அனுபவ வீரர் டாம் லேதம் அணியை வழி நடத்துகிறார்.

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக மூன்று முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி காயம் காரணமாக இஷாந்த் ஷர்மா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ரஹானே ஆகியோர் வெளியேற்றப்பட்டு அவர்களுக்கு பதிலாக விராட் கோலி ஜெயந்த் யாதவ் மற்றும் சிராஜ் ஆகியோர் விளையாடுகின்றனர்.

injury

தற்போது இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சை ஆரம்பித்து விளையாடி வருகிறது. இந்த இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

- Advertisement -

இதையும் படிங்க : டி20 கிரிக்கெட்டை தொடர்ந்து டெஸ்ட் தரவரிசையிலும் மிகப்பெரிய சறுக்கலை சந்தித்துள்ள – விராட் கோலி

1) சுப்மன் கில், 2) மாயங்க் அகர்வால், 3) புஜாரா, 4) விராட் கோலி, 5) ஷ்ரேயாஸ் ஐயர், 6) சாஹா 7) அஷ்வின், 8) அக்சர் படேல், 9) ஜெயந்த் யாதவ், 10) முகமது சிராஜ், 11) உமேஷ் யாதவ்.

Advertisement