இஷான் கிசான், ஸ்ரேயாஸ், சஹர் போன்ற வீரர்களுக்கு கடைசி எச்சரிக்கை.. ஜெய் ஷா வெளியிட்ட அதிரடி கடிதம்

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் இரண்டு போட்டிகளில் விக்கெட் கீப்பராக விளையாடிய கேஎஸ் பரத் பேட்டிங்கில் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினார். எனவே அவருக்கு பதிலாக 2023 வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அறிமுகமாகி ஓரளவு அசத்திய இசான் கிசானை தேர்ந்தெடுக்க இந்திய அணி நிர்வாகம் விரும்பியது. ஆனால் கடந்த டிசம்பரில் நடந்த தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரிலிருந்து அவர் சொந்த காரணங்களுக்காக வெளியேறினார்.

அதனால் ஜனவரியில் நடந்த ஆப்கானிஸ்தான் டி20 தொடர் மற்றும் இப்போதைய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர் தேர்வுக்கு தகுதியான வீரர்களின் பட்டியலில் இடம் பெறவில்லை. அதன் காரணமாக இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப ரஞ்சிக்கோப்பையில் விளையாடி தயாராக இருங்கள் என்று ராகுல் டிராவிட் அவரை அறிவுறுத்தியிருந்தார்.

- Advertisement -

ஜெய் ஷா கடிதம்:
ஆனால் அதை செய்யாத இசான் கிசான் பரோடாவுக்கு சென்று பாண்டியா சகோதரர்களுடன் சேர்ந்து 2024 ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டார். அந்த நிலையில் தேர்வுக்குழுவினர் அல்லது பயிற்சியாளர்கள் கேட்டால் எந்த வீரராக இருந்தாலும் உள்ளூர் தொடரில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார். மேலும் மத்திய சம்பள ஒப்பந்தத்தில் கையெழுத்தாகியுள்ள அனைத்து வீரர்களும் ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் ரஞ்சிக் கோப்பையில் கண்டிப்பாக விளையாட வேண்டும் என்றும் ஜெய் ஷா எச்சரித்திருந்தார்.

ஆனால் அதையும் மதிக்காத இஷான் கிசான் பிப்ரவரி 16ஆம் தேதி துவங்கிய ராஜஸ்தானுக்கு எதிரான ரஞ்சிகோப்பை போட்டியில் தன்னுடைய மாநில அணியான ஜார்கண்டுக்கு விளையாடவில்லை. இந்நிலையில் இஷான் கிசான், ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் சஹர் போன்ற ஃபிட்டாக இருந்தும் ரஞ்சிக்கோப்பையில் விளையாடாத வீரர்களுக்கு ஜெய் ஷா கடிதம் எழுதி கடைசியாக விடுத்துள்ள எச்சரிக்கை பின்வருமாறு.

- Advertisement -

“தற்போது ஏற்பட்டுள்ள புதிய டிரெண்ட் ஆபத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. சில வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட்டுக்கு பதிலாக ஐபிஎல் தொடருக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். இது எதிர்பார்க்கப்படாத மாற்றமாகும். உள்ளூர் போட்டிகள் தான் இந்திய கிரிக்கெட்டின் அடித்தளமாக இருந்து வருகிறது. அதை ஒருபோதும் குறைத்து மதிப்பிடவில்லை. இந்தியாவுக்கு விளையாட விரும்பும் ஒவ்வொரு வீரர்களும் உள்ளூர் கிரிக்கெட்டில் தங்களுடைய திறமையை நிரூபிக்க வேண்டும்”

இதையும் படிங்க: திடீரென 3வது நாளில் இந்திய வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து விளையாடியது ஏன்? பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு

“இப்போதும் உள்ளூர் கிரிக்கெட்டில் வெளிப்படுத்தும் செயல்பாடுகள் தான் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவதற்கான முதன்மை அளவுகோலாகும். அதில் விளையாடாதவர்கள் மீது கடுமையான தாக்கங்கள் ஏற்படும். ரஞ்சிக் கோப்பை தான் ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக நடப்பதற்கு உதவியாக இருக்கிறது. சுனில் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்கள் காலையில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி மாலையில் உள்ளூர் போட்டிகளில் விளையாடினார்கள். எனவே உள்ளூர் போட்டிகள் நம்முடைய பொறுப்பு மற்றும் பெருமையாகும்” என்று கூறினார்.

Advertisement