திடீரென 3வது நாளில் இந்திய வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து விளையாடியது ஏன்? பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு

Team India
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. அதில் முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது. எனவே சமனில் இருக்கும் இந்த தொடரில் முன்னிலை பெறும் முனைப்புடன் பிப்ரவரி 15ஆம் தேதி துவங்கிய மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து 445 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா சதமடித்து 132, ரவீந்திர ஜடேஜா 112 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மார்க் 4 வுட் விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய களமிறங்கிய இங்கிலாந்துக்கு பென் டக்கெட் அதிரடியாக விளையாடி சதமடித்து 153 (151) ரன்கள் விளாசி இந்தியாவுக்கு சவாலை கொடுத்தார்.

- Advertisement -

பிசிசிஐ அறிவிப்பு:
அதனால் 224/2 என ஒரு கட்டத்தில் வலுவான நிலையில் இருந்த இங்கிலாந்தை சுதாரிப்புடன் செயல்பட்ட இந்திய அணி அடுத்த 95 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை எடுத்து 319 ரன்களுக்கு சுருட்டியது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4, குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா தாலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இதைத் தொடர்ந்து 126 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடுகிறது.

முன்னதாக இந்த போட்டியில் முதலிரண்டு நாட்களில் வழக்கம் போல விளையாடிய இந்திய வீரர்கள் மூன்றாவது நாளில் திடீரென தங்களது கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடியது ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தது. அதற்கான காரணம் என்னவெனில் முன்னாள் இந்திய கேப்டன் தாதாஜி ராவ் கைக்வாட் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இயற்கை எய்தினார்.

- Advertisement -

கடந்த 1952 – 1961 வரையிலான காலகட்டங்களில் இந்தியாவுக்காக 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 350 ரன்களை எடுத்துள்ளார். மேலும் 1952 இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா விளையாடிய டெஸ்ட் தொடரில் அவர் கேப்டனாகவும் இருந்தார். அத்துடன் 1957 ரஞ்சிக் கோப்பையை அவருடைய தலைமையில் பரோடா வென்று சாதனை படைத்தது.

இதையும் படிங்க: 224/2 டூ 319 ஆல் அவுட்.. அஸ்வின் இல்லாமலயே இங்கிலாந்தை சுருட்டி.. குக் முகத்தில் கரியை பூசிய இந்தியா

அந்த வகையில் 110 உள்ளூர் போட்டிகளில் 5788 ரன்களையும் 25 விக்கெட்களையும் எடுத்து ஆரம்ப காலங்களில் இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக 95 வயதில் இயற்கை எய்தினார். சொல்லப்போனால் அதன் வாயிலாக நீண்ட காலம் வாழ்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையும் அவர் கொண்டிருந்தார். அப்படிப்பட்ட அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலேயே இந்திய வீரர்கள் தற்போது கருப்புப்பட்டை அணிந்து விளையாடுவதாக பிசிசிஐ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement