விராட் கோலி, ஜடேஜா வேண்டாம் என அடம் பிடித்த அகார்கர் – விடாப்பிடியாக டீமில் சேர்த்த முக்கிய நிர்வாகி (விவரம் இதோ)

Agarkar
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகளில் வரும் ஜூன் மாதம் 2-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடருக்கான போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்க இருப்பதினால் எந்த அணி இறுதி வரை சென்று கோப்பையை கைப்பற்றப்போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பும் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏற்கனவே இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டு தேதிகள் உறுதியான நிலையில் இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது அணிகளை சார்ந்த 15 பேர் கொண்ட அணியை மே மாதம் 1-ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. அந்த வகையில் இந்த உலகக்கோப்பை தொடருக்ககான போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் ஒவ்வொன்றாக தற்போது தங்களது அணியின் வீரர்களை வெளியிட்டு வருகிறது.

- Advertisement -

இவ்வேளையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ-யும் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்த இந்திய அணியில் 15 பேர் கொண்ட பட்டியலையும் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்த அணியை தேர்ந்தெடுப்பதற்கு முன்னதாக நடைபெற்ற மீட்டிங்கில் பல்வேறு சுவாரஸ்யமான விடயங்கள் நடைபெற்று முடிந்த விவகாரம் தற்போது வெளியாகி உள்ளது.

அந்த வகையில் 2007-ஆம் ஆண்டு போன்று இந்த ஆண்டும் இளம் வீரர்களைக் கொண்ட அணியையே தேர்வு செய்ய வேண்டும் என்று அஜித் அகார்கர் அவர்கள் முடிவெடுத்து இருக்கிறார். ஆனால் அதற்கு ஆமோதிக்கும் வகையில் செயல்பட்டுள்ள செயலாளர் ஜெய் ஷா அனுபவம் வாய்ந்த வீரர்களையும் சேர்க்க வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளார். அதன்படி விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகியோரை அணியில் தேர்வு செய்ய வேண்டாம் என அகார்கர் முடிவெடுத்த வேளையில் அதற்கு ஜெய்ஷா மறுப்பு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா போன்ற ஆடுகளங்களில் விராட் கோலி ரன் குவிக்க தடுமாறுவார் என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்த அவர் விராட் கோலி நிச்சயம் சிறப்பாக செயல்பாடுவார் என்று கூறியது மட்டுமின்றி ஆல்ரவுன்டரான ரவீந்திர ஜடேஜாவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றும் ஆதரவு தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தேர்வுக்கு மீட்டிங்கில் சில காலசாரமான விவாதங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இறுதியில் அகார்கரின் முடிவை மீறி ஜெய் ஷா இந்த ஆலோசனை கூட்டத்தில் ரவீந்திர ஜடேஜா மற்றும் விராட் கோலி ஆகியோரை இணைக்க வேண்டும் என்று கராராக இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்த வீரராக கோலி மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். அதேபோன்று ஆல்ரவுண்டராக ஜடேஜாவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

இதையும் படிங்க : மும்பைக்காக லக்னோவை தோற்கடிக்க போராடினார்களா அம்பயர்கள்? மீண்டும் ஆதாரத்துடன் விமர்சிக்கும் ரசிகர்கள்

எனவே அவர்கள் இருவரையும் அணியில் சேர்க்க வேண்டும் என்று ஜெய் ஷா ஒற்றைக்காலில் நின்றதால் அவரது ஆதரவின் பேரிலே இவர்கள் இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாட்டில் டி20 தொடர் நடைபெறுவதால் இது போன்ற ஸ்டார் வீரர்கள் இருந்தால்தான் இந்த தொடரானது வெற்றி பெறும் என்று கூறியும் அஜித் அகார்கரை ஜெய் ஷா சமாதானம் செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement