- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஆஸி தொடரை விடுங்க.. இந்தியா அந்த ஹாட்ரிக் வெற்றியை பெறப்போவது உறுதி.. ஜெய் ஷா பேட்டி

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அடுத்ததாக 2024/25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் என்றே சொல்லலாம். ஏனெனில் சௌரவ் கங்குலி, தோனி உட்பட பல கேப்டன்கள் தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் காலம் காலமாக இந்தியா தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்தது. இருப்பினும் அதை விராட் கோலி தலைமையில் 2018/19ஆம் ஆண்டு மாற்றிய இந்தியா முதல் முறையாக தொடரை வென்றது.

அதே போல 2020/21 தொடரில் மீண்டும் ரஹானே தலைமையில் சிறப்பாக விளையாடிய இந்தியா 2 – 1 (4) என்ற கணக்கில் கோப்பையை வென்றது. அதனால் ஆஸ்திரேலிய மண்ணில் 2 டெஸ்ட் தொடர்களை வென்ற ஒரே ஆசிய அணியாக இந்தியா வரலாறு படைத்தது. அந்த வரிசையில் இம்முறை ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா ஹாட்ரிக் வெற்றிகளை பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

- Advertisement -

வேற ஹாட்ரிக்:

இதற்கிடையே 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையில் இந்தியா வென்றது. அதனால் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பை வென்ற இந்தியா கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்த தொடர் தோல்விகளையும் நிறுத்தியது. இந்நிலையில் இந்தியா அடுத்ததாக நடைபெறும் 3 ஐசிசி தொடர்களை வெல்லும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வரும் அக்டோபர் மாதம் துபாயில் 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து ஆடவர் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் நடைபெற உள்ளது. அந்த மூன்றிலும் இந்திய ஆடவர் மற்றும் மகளிரணி வெற்றிகளைப் பெற்று ஹாட்ரிக் கோப்பைகளை வெல்லும் என்று ஜெய் ஷா உறுதியாக கூறியுள்ளார்.

- Advertisement -

3 ஐசிசி வெற்றிகள்:

இது பற்றி 2024 சியட் விருதுகள் வழங்கும் விழாவில் அவர் பேசியது பின்வருமாறு. “பார்படாஸ் மண்ணில் ரோகித் சர்மா இந்திய மூவர்ணக் கொடியை நிலை நாட்டுவார் என்று டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக நான் சொன்னதை இங்கே அனைவருக்கும் நினைவுபடுத்த விரும்புகிறேன். அதை ரோஹித் சர்மா செய்து காட்டினார். உங்களுக்கு 140 கோடி மக்களின் ஆசிர்வாதம் இருக்கிறது”

இதையும் படிங்க: முன்னாடியே சொல்லியும்.. ரிஸ்வான் இரட்டை சதத்தை கேப்டன் வேண்டுமென்றே டிக்ளேர் செய்து தடுத்தாறா? ஷாக்கீல் பதில்

“எனவே அதே போன்ற வெற்றியை நாம் சாம்பியன்ஸ் டிராபி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் மகளிர் டி20 உலகக் கோப்பையில் பெறுவோம் என்று நான் சொல்வேன்” எனக் கூறினார். அவர் கூறுவது போல கடந்த 10 வருடங்களில் இந்தியா 1 கோப்பையை மட்டுமே வென்றது. எனவே அடுத்த 3 கோப்பைகளை தொடர்ந்து வென்றால் அது இந்திய ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையும்.

- Advertisement -