கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வந்த ஐபிஎல் 2024 தொடர் கோலாகலமாக நிறைவு பெற்றுள்ளது. அதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் வெற்றி பெற்ற கொல்கத்தா சென்னையில் நடந்த மாபெரும் இறுதிப்போட்டியில் ஹைதராபாத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அதையும் சேர்த்து 3வது கோப்பை வென்ற கொல்கத்தா இரண்டாவது வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்தது.
இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக பவுலர்களை அடித்து நொறுக்கிய பேட்ஸ்மேன்கள் 1260 சிக்ஸர்கள் அடித்தனர். அதனால் வரலாற்றிலேயே அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட ஐபிஎல் தொடராக 2024 சீசன் புதிய சாதனை படைத்தது. மேலும் ஹைதராபாத் அணி 287 ரன்கள் குவித்து, 166 ரன்களை 9.2 ஓவரில் சேசிங் செய்தது போன்ற பல்வேறு சாதனைகள் ரசிகர்களுக்கு மறக்க முடியாத விருந்தாக அமைந்தது.
ஸ்பெஷல் விருது:
அந்த வகையில் கோலாலமாக நிறைவு பெற்ற இந்த தொடரில் வென்ற கொல்கத்தாவுக்கு 20 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. தோல்வியை சந்தித்த ஹைதராபாத்துக்கு 12.50 கோடி பரிசாக கொடுக்கப்பட்டது. அது போக ஆரஞ்சு தொப்பி வென்ற விராட் கோலி உள்ளிட்ட பல்வேறு வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஐபிஎல் 2024 ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக நடத்த உதவிய மைதானங்களுக்கு பிசிசிஐ ஸ்பெஷல் விருது அறிவித்துள்ளது.
அதன் படி ஃபைனல் நடைபெற்ற சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி, ஹைதராபாத், முல்லான்பூர், பெங்களூரு, ஜெய்ப்பூர், லக்னோ, குஜராத் உள்ளிட்ட 10 முதன்மை மைதானங்களுக்கு தலா 25 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுவதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். அத்துடன் விசாகப்பட்டினம், கௌகாத்தி, தரம்சாலா ஆகிய 3 நகரங்களில் உள்ள மைதானங்களில் கணிசமான போட்டிகள் நடைபெற்றது.
அந்த 3 மைதானங்களுக்கு தலா 10 லட்சம் ஸ்பெஷல் பரிசு கொடுக்கப்படுவதாகவும் ஜெய் ஷா அறிவித்துள்ளார். ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக நடத்துவதற்காக பாடுபட்ட மைதான பராமரிப்பாளர்கள், பிட்ச் தயாரிப்பாளர்களை பாராட்டும் வகையில் இந்த பரிசுத்தொகை கொடுக்கப்படுவதாகவும் ஜெய் ஷா ட்விட்டரில் பாராட்டியுள்ளார். இது போக ஐபிஎல் 2024 தொடரின் சிறந்த மைதானமாக ஹைதராபாத் தேர்வு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: ஐபிஎல் மாதிரி இருக்காது.. இந்த 2 காரணத்தால் டி20 உலகக் கோப்பையில் பவுலர்ஸ் அசத்துவாங்க.. ஸ்டார்க் பேட்டி
அதற்கு ஏற்கனவே கோப்பை வழங்கும் நிகழ்வின் இறுதியில் ஜெய் ஷா நேரடியாக ஹைதெராபாத் மைதான பராமரிப்பாளருக்கு ஸ்பெஷல் விருதை வழங்கினார். மொத்தத்தில் 2024 ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மைதானங்கள் இருப்பதாக பல விமர்சனங்கள் போது காணப்பட்டது. இருப்பினும் ரசிகர்களை பொழுதுபோக்கே முக்கியம் என்று கருதும் பிசிசிஐ அந்த மைதானங்களுக்கு பரி



