இந்தியா குறித்த சர்ச்சை பேச்சு. மீண்டும் வம்பிழுத்த பாக் வீரர் – விவரம் இதோ

Mianmad-1
- Advertisement -

பாதுகாப்பு கருதி வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாட பயந்து வரும் நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை அணி பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியது. அதற்கடுத்து பாகிஸ்தான் நாட்டில் அனைத்து அணிகளும் விளையாடவேண்டும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விரும்பியது.

Ehsan

- Advertisement -

ஆனால் தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் வங்கதேச அணி பாகிஸ்தான் அணியுடன் விளையாட மறுத்து சர்ச்சையானது. இந்நிலையில் இந்தியாவே பாதுகாப்பு அச்சுறுத்தல் மிகுந்த நாடு என ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி நிர்வாகி ஹேசன் மணி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜாவித் மியான்தத் கூறுகையில் : இந்தியாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை மக்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் ஐசிசி இந்தியாவை புறக்கணிக்க வேண்டும். ஏனெனில் சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைவரும் இந்தியாதான் பாதுகாப்பு அற்ற நாடு என்று கருதுகின்றனர். பாகிஸ்தான் அப்படி இல்லை மனிதர்களாகவும் கிரிக்கெட் வீரராகவும் நாம் இந்தியாவிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

mianmad

இந்தியாவில் நடப்பதை நாம் அனைவரும் அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். எனவே நான் பாகிஸ்தான் சார்பாக பேசுகிறேன். இந்தியாவுடனான அனைத்து போட்டிகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மியான்மத் கூறினார். இவரின் இந்த பேட்டி தற்போது சர்ச்சையாக மாறியது அதுமட்டுமின்றி ரசிகர்களின் ஏகோபித்த விமர்சனத்தையும் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement