தோத்துடுவோம்னு பயமா? எங்க ஊர்க்கு வரலைனா அப்றம் நரகத்த பாப்பிங்க – இந்தியாவுக்கு முன்னாள் பாக் வீரர் பகிரங்க எச்சரிக்கை

Babar Azam Rohit Sharma IND vs PAK
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லை பிரச்சனையால் கடந்த 10 வருடங்களாக இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து வேண்டா வெறுப்பாக ஆசிய மற்றும் ஐசிசி உலக கோப்பைகளில் மட்டும் மோதி வருகின்றன. ஆனால் அடுத்ததாக 2023 ஆசிய மற்றும் உலக கோப்பையில் இவ்விரு அணிகளும் மோதுமா என்ற சந்தேகம் நிலவுகிறது. ஏனெனில் 2022ஆம் ஆண்டு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக பொறுப்பேற்ற ஜெய் ஷா தலைமையில் உறுப்பு நாடுகளின் சம்மதத்துடன் 2023 ஆசியக் கோப்பையை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் வாங்கியது.

- Advertisement -

ஆனால் எல்லை பிரச்சினை காரணமாக இந்திய அரசின் அனுமதியை தாண்டி பாகிஸ்தானுக்கு சென்று ஆசிய கோப்பையில் பங்கேற்காது என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அத்தொடரை பொதுவான இடத்தில் நடத்துவதற்கான அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதனால் அதிருப்தியடைந்த பாகிஸ்தான் வாரியம் எங்களது நாட்டில் நடைபெறும் ஆசிய கோப்பையில் பங்கேற்கவில்லை என்றால் அக்டோபர் மாதம் உங்களது நாட்டில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பைக்கு பங்கேற்க நாங்களும் வரமாட்டோம் என்று அதிரடியாக அறிவித்தது. அதை உறுதி செய்த அப்போதைய தலைவர் ரமீஷ் ராஜா நாங்கள் பங்கேற்காத உலக கோப்பையை இந்தியாவில் யார் பார்ப்பார் என்றும் விமர்சித்திருந்தார்.

தோல்வி பயமா:
அந்த நிலைமையில் பிப்ரவரி 4ஆம் தேதியன்று பக்ரைனில் நடைபெற்ற ஆசிய கவுன்சில் கூட்டத்தில் 2023 ஆசிய கோப்பை நடைபெறும் இடத்தைப் பற்றி விவாதத்தை பாகிஸ்தான் எழுப்பியும் அதற்கு பிடி கொடுக்காத ஜெய் ஷா அந்த முடிவை அடுத்த கூட்டத்திற்கு ஒத்தி வைத்ததாக தெரிகிறது. அதனால் அதிருப்தியடைந்த புதிய தலைவர் நஜாம் சேதி எங்கள் நாட்டுக்கு வரவில்லை என்றால் உங்களது நாட்டில் நடைபெறும் உலக கோப்பையை புறக்கணிப்போம் என்று நேரடியாக ஜெய் ஷா’விடம் எச்சரித்ததாக செய்திகள் வெளியானது.

Jay Shah Najam Sethi

இந்நிலையில் எங்களுடன் மோதினால் தோற்று விடுவோம் என்ற பயத்தினாலேயே இந்தியா பாகிஸ்தான் வர மறுப்பதாக முன்னாள் வீரர் ஜாவேத் மியான்தத் பகிரங்க சவால் விடுத்துள்ளார். அதை விட இம்முறை தங்களது நாட்டுக்கு வராமல் போனால் உங்களுக்கு நரகத்தை காட்டுவோம் என்றும் இந்தியாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள அவர் இது பற்றி பிரபல பாகிஸ்தான் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை பாகிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட்டில் விளையாடாமல் போனால் இந்தியா நரகத்திற்கு தான் செல்ல வேண்டும். நான் இந்த விவகாரத்தில் எப்போதும் பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுக்கிறேன். வரலாற்றில் இது போன்ற தருணங்களில் இந்தியாவை நான் எப்போதும் விமர்சிக்காமல் விட்டு வைத்ததில்லை”

- Advertisement -

“ஆனால் இம்முறை எங்களது பக்கம் பார்க்க வேண்டும். நாங்கள் அவர்களுடன் உரிமைக்காக சண்டையிட வேண்டும். நாங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை ஏனெனில் ஆசிய கோப்பை நடத்தும் உரிமை எங்களிடம் உள்ளது. இதில் முடிவெடுப்பது ஐசிசி வேலையாகும். ஒருவேளை இதை ஐசிசி கட்டுப்படுத்த முடியாமல் போனால் வேறு எந்த நிர்வாகமும் கட்டுப்படுத்த முடியாது. மேலும் இது போன்ற தொடர்களுக்கு வராத இந்தியா போன்ற அணிகளை ஐசிசி தடை செய்ய வேண்டும்”

Javed

“இந்தியா எங்களுடன் வந்து விளையாட வேண்டும். ஏன் அவர்கள் வராமல் ஓடுகிறார்கள். ஏனெனில் ஒருவேளை எங்களது நாட்டுக்கு வந்து அவர்கள் எங்களிடம் தோற்றால் அவர்கள் நிறைய பிரச்சினையை சந்திக்க நேரிடும். அப்படி தோல்வியை சந்தித்தால் இந்தியாவில் இருக்கும் மக்களால் அதை ஜீரணிக்க முடியாது. அதுதான் இதற்கான காரணமாகும். எங்களது காலகட்டங்களிலும் அவர்கள் இதே காரணத்தாலேயே எங்களுடன் விளையாட மறுத்தார்கள். குறிப்பாக இந்தியா தோற்கும் போதெல்லாம் அங்குள்ள சில வீரர்களின் வீடுகள் எரிப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்”

இதையும் படிங்க: நாக்பூர் நமக்கும் ராசி தான், அதை மட்டும் செஞ்சா ஈஸியா ஜெயிக்கலாம் – இந்தியாவை சாய்க்க மிட்சேல் ஜான்சன் ஆலோசனை

“அங்குள்ள பொதுமக்கள் கிரிக்கெட் என்பதை விளையாட்டு என்றும் அதில் நீங்கள் நன்றாக விளையாடவில்லை என்றால் தோல்விக்கு தகுதியானவர் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். நான் நன்றாக விளையாடினால் வெற்றிக்கு தகுதியானவன். மேலும் இதில் ஐசிசி கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் இந்தியா என்றால் என்ன? இந்தியா உட்பட எந்த நாடும் இப்படி நடந்து கொண்டால் ஐசிசி அந்த அணிகள் மீது நடவடிக்கை எடுத்து அகற்ற வேண்டும். அப்போது தான் அவர்கள் பாடம் கற்பார்கள்” என்று கூறினார்.

Advertisement