
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. ஆனால் பிப்ரவரி 19ஆம் தேதி துவங்கிய அந்தத் தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தான் 5 நாட்களில் தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது. அதிலும் பரம எதிரி இந்தியாவுக்கு எதிராக துபாயில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் போராடாமலேயே 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
அது அந்நாட்டு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடம் மிகப்பெரிய ஏமாற்றத்தையும் கோபத்தையும் உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் அணி நிர்வாகிகளுக்கும் சம்பளம் கொடுக்கப்படவில்லையா? என முன்னாள் வீரர் ஜாவேத் மியான்தத் கடுமையாக விமர்சித்துள்ளார். ஏனெனில் அந்தளவுக்கு களத்தில் கொஞ்சம் கூட பாகிஸ்தான் அணி நெருப்பாக வெற்றிக்கு போராடவில்லை என்று அவர் சாடியுள்ளார்.
களமிறங்குவதற்கு முன்பாகவே இந்தியாவுக்கு எதிராக அதிரடியாக விளையாடுவதற்கான பாடி லாங்குவேஜ் கூட பாகிஸ்தான் வீரர்களிடம் காணப்படவில்லை என்றும் மியான்தத் கடுமையாக விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தான் அணியின் சிஸ்டம் மற்றும் தேர்வாளர்கள் போன்றவர்களைக் குறை சொல்வது பயனற்றது. இங்கே கேள்வி என்னவெனில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்கள் எதற்கும் குறைவாக இருக்கிறார்களா?”
“பாகிஸ்தான் வாரியம் அவர்களை கவனிக்கவில்லையா? அவர்களுக்கு போதுமான சம்பளம் கொடுக்கவில்லையா? ஏனெனில் பெரிய போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதற்கான ஆர்வமும் நெருப்பும் நிபுணத்துவமும் அவர்களிடம் காணப்படவில்லை. உண்மை என்னவெனில் போட்டி துவங்குவதற்கு முன்பாகவே நமது வீரர்கள் அழுத்தத்திற்குள் தள்ளப்படுகிறார்கள்”
“அவர்களுடைய பாடி லாங்குவேஜை பாருங்கள். இந்திய பவுலர்களை டாமினேட் செய்து அதிரடியாக எதிர்கொள்வதற்கான மனநிலையுடன் இருப்பது போல் அவர்கள் தெரியவில்லை” என்று கூறினார். இது போக முகமது ஹபீஸ், சோயப் அக்தர், வாசிம் அக்ரம் உள்ளிட்ட நிறைய முன்னாள் வீரர்கள் பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: சிக்கலில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி.. கடைசி நேரத்தில் விலக வாய்ப்பு – விவரம் இதோ
அதற்கான காரணம் என்னவெனில் 2021 டி20 உலகக் கோப்பை தவிர்த்து இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பெரும்பாலும் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. அதை விட ஜிம்பாப்வே, அமெரிக்கா போன்ற கத்துக் குட்டிகளிடமும் சமீபத்திய ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் பரிதாபமாக தோற்றது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் வீட்டுக்கு கிளம்புவதற்கு முன்பாக தங்களது கடைசிப்போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டு ஆறுதல் வெற்றியைப் பெற முயற்சிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.