இந்தியா தான் பாகிஸ்தானை ஏமாத்துறாங்க, 2012ல கொடுத்த வாக்கை இன்னும் காப்பாத்தல – ஜாவேத் மியாண்தத் மீண்டும் விமர்சனம்

Javed Miandad
- Advertisement -

ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லை பிரச்சினை காரணமாக கடந்து 10 வருடங்களாக இருதரப்பு தொடர்களில் விளையாடுவதை தவிர்த்து விட்டு ஆசிய மற்றும் ஐசிசி உலகக் கோப்பைகளில் மட்டுமே மோதி வருகின்றன. ஆனால் அந்த வரிசையில் பாகிஸ்தானில் நடைபெறும் 2023 ஆசிய கோப்பையில் பாதுகாப்பு பிரச்சனைகளால் அரசின் அனுமதியின்றி இந்தியா பங்கேற்காது என்று அறிவித்த பிசிசிஐ செயலாளர் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா அத்தொடரை பொதுவான இடத்தில் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும் உறுப்பு நாடுகளின் அனுமதியுடன் அத்தொடரை நடத்தும் உரிமையை பெற்ற தங்களிடம் கேட்காமல் இப்படி அறிவித்தது ஏமாற்றமளிப்பதாக பாகிஸ்தான் அடுத்த நாளே பதிலளித்தது.

Jay Shah IND vs PAk

- Advertisement -

அதை விட எங்கள் நாட்டுக்கு ஆசிய கோப்பையில் பங்கேற்க வராமல் போனால் வரும் அக்டோபர் மாதம் உங்களது நாட்டில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பையில் பங்கேற்க நாங்களும் வரமாட்டோம் என்று அப்போதைய பாகிஸ்தான் வாரிய தலைவர் ரமேஷ் ராஜாவும் இப்போதைய தலைவர் நஜாம் சேதியும் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். அப்போதிலிருந்தே இந்த விவகாரம் பற்றி இருநாட்டுக்கும் இடையே அனல் பறக்கும் விவாதங்களும் கருத்துக்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன.

வாக்கை காப்பாத்துங்க:
குறிப்பாக பாகிஸ்தானுக்கு ஆசிய கோப்பையில் பங்கேற்க இந்தியா வராமல் போனால் நரகத்தை சந்திக்க நேரிடும் என்று முன்னாள் வீரர் ஜாவேத் மிண்ட்தத் அதிரடியாக விமர்சித்தார். மேலும் 2021 டி20 உலக கோப்பையில் முதல் முறையாக தோற்ற இந்தியா தங்களது நாட்டில் பாகிஸ்தான் மக்களுக்கு முன்னிலையில் தோல்வியை சந்தித்தால் ஜீரணிக்க முடியாது என்பதாலேயே பாதுகாப்பை காரணமாக காட்டி வர மறுப்பதாக முன்னாள் வீரர் இம்ரான் நசீர் பேசினார்.

INDvsPAK

இருப்பினும் பாகிஸ்தான் இப்படி என்ன பேசினாலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளை விட ஐசிசிக்கு அதிக வருமானத்தை கொடுத்து ஆசிய கவுன்சிலுக்கே நிதியுதவி அளிக்கும் நாடாக இருக்கும் இந்தியாவின் ஜெய் ஷா எடுக்கும் முடிவே இந்த விவகாரத்தில் இறுதியாக இருக்கும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. அதையும் விட்டு வைக்காத முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் மற்றும் பிரதமர் இம்ரான் கான் அதிகாரம் இருக்கும் ஆணவத் திமிரில் இந்தியா ஆடுவதாக கடந்த வாரம் கடுமையாக விமர்சித்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்தியாவுக்கு பயணித்து உலக கோப்பையில் பங்கேற்பதில் தங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை என்று முன்னாள் வீரர் ஜாவேத் மியாண்தட் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு கைமாறாக அவர்களும் தங்களது நாட்டுக்கு வருவதே நியாயம் என்று கூறும் அவர் கடைசியாக 2012ஆம் ஆண்டு கொடுத்த வாக்கையே இன்னும் இந்தியா நிறைவேற்றாமல் ஏமாற்றி வருவதாக விமர்சித்துள்ளார்.

IND vs PAK 2012

அதாவது 2008க்குப்பின் இந்தியா – பாகிஸ்தான் மோதும் இருதரப்பு தொடர்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் சில வருடங்களுக்குப் பின் மீண்டும் விளையாடுவதற்காக நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் 2012இல் வெற்றிகரமாக முடிந்தன. அதில் இந்தியாவுக்கு முதலில் சென்று பாகிஸ்தான் விளையாடுவது என்றும் பின்னர் பாகிஸ்தானில் இந்தியா விளையாடுவது என்றும் முடிவு செய்யப்பட்டன.

- Advertisement -

அதன் படி 2012இல் முகமது ஹபீஸ் தலைமையில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் டி20 தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற பாகிஸ்தான் ஒருநாள் தொடரிலும் 2 – 1 (3) என்ற கணக்கில் தோற்கடித்தது. ஆனால் அதன் பின் பாகிஸ்தானுக்கு வராமல் இருக்கும் இந்தியா அந்த பேச்சு வார்த்தைகளின் படி தற்போது நடந்து கொள்ள வேண்டிய நேரம் என்று தெரிவிக்கும் மியாண்தத் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

Javed

இதையும் படிங்க:IPL 2023 : ட்வயன் ப்ராவோ, லசித் மலிங்கா ஆகிய ஜாம்பவான்களின் சாதனையை உடைத்த ரபாடா – புதிய ஐபிஎல் வரலாற்று சாதனை

“பாதுகாப்பு பிரச்சினைகளை மறந்து விடுங்கள். ஏனெனில் வாழ்வும் சாவும் எல்லாம் வல்ல இறைவனின் கையில் இருக்கிறது. எனவே ஒருவேளை இந்தியா எங்களை இன்று அழைத்தால் கூட நாங்கள் அங்கே செல்வோம். ஆனால் பதிலுக்கு அவர்களும் இங்கே வர வேண்டும். உண்மை என்னவெனில் கடந்த முறை நாங்கள் இந்தியாவுக்கு சென்றோம். ஆனால் பதிலுக்கு அவர்கள் இதுவரை பாகிஸ்தானுக்கு வரவில்லை. எனவே இது அவர்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றி வர வேண்டிய நேரமாகும்” என்று கூறினார்.

Advertisement