பாபரை திட்டாதீங்க.. இந்தியாவிடம் தோத்ததெல்லாம் மேட்டரே கிடையாது.. பாகிஸ்தான் அங்க சம்பவம் செய்வாங்க – மியான்தத் ஆதரவு

Javed Miandad
- Advertisement -

பரபரப்பாக நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை 8வது முறையாக வென்ற இந்தியா சொந்த மண்ணில் நடைபெறும் 2023 உலக கோப்பையில் ஆசிய சாம்பியனாக களமிறங்க தயாராகி வருகிறது. மறுபுறம் உலகின் நம்பர் ஒன் அணியாக களமிறங்கிய பாபர் அசாம் தலைமையில் களமிறங்கிய பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றில் இலங்கையிடம் தோல்வியை சந்தித்து பரிதாபமாக வெளியேறியது.

குறிப்பாக ஷாஹீன் அப்ரிடி போன்ற தரமான பவுலர்களை கொண்டிருப்பதால் பரம எதிரி இந்தியாவை அசால்டாக தோற்கடித்து பாகிஸ்தான் கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டை சேர்ந்த முன்னாள் வீரர்கள் ஆரம்பத்தில் தெரிவித்தனர். ஆனால் சூப்பர் 4 சுற்றில் 228 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் வரலாறு காணாத தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் மோசமான ரன்ரேட்டை பெற்று அதிலிருந்து கடைசி வரை மீள முடியாமல் நாடு திரும்பியது.

- Advertisement -

மேட்டரே இல்லை:
அப்படி ஃபைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியதால் தற்போது பாகிஸ்தான் அணியினர் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்கள். போதாகுறைக்கு பாபர் அசாம் மற்றும் சாகின் அப்ரிடி ஆகியோரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பாகிஸ்தான் அணியில் விரிசல் உண்டாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

அதனால் சமீப காலங்களாகவே தோல்விகளை சந்தித்து வருவதால் பாபர் அசாமை நீக்கிவிட்டு பிஎஸ்எல் கோப்பையை வென்ற அனுபவமிக்க ஷாஹீன் அப்ரிடியை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற குரலும் அந்நாட்டில் காணப்படுகிறது. இந்நிலையில் ஆசிய கோப்பையில் இந்தியா போன்ற அணிகளிடம் சந்தித்த தோல்வி ஒரு பெரிய விஷயம் கிடையாது என ஜாவேத் மியான்தத் கூறியுள்ளார். எனவே பாபர் அசாமை விமர்சிக்க தேவையில்லை என்று தெரிவிக்கும் அவர் 2023 உலக கோப்பையில் பாகிஸ்தான் சிறப்பாக செயல்படும் என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆசிய கோப்பையில் இந்தியா மற்றும் இலங்கை போன்ற அணிகளுக்கு எதிராக எஞ்சிய பாகிஸ்தான் அணியினரும் சிறப்பாக செயல்படாத போது பாபர் அசாமை மட்டும் ஏன் குறை சொல்ல வேண்டும். முதலில் ஆசிய கோப்பையில் நமது அணி தோல்வியை சந்தித்ததால் மிகவும் மோசம் என்று அர்த்தம் கிடையாது. ஏனெனில் உலகக்கோப்பையில் அசத்தும் அளவுக்கு நமது அணியில் ஏராளமான திறமைகள் இருக்கிறது”

இதையும் படிங்க: சச்சின், அமிதாப் பச்சனை தொடர்ந்து ரஜினிகாந்துக்கு பி.சி.சி.ஐ யின் மூலம் கிடைத்த கவுரவம் – ஜெய் ஷா நேரில் சந்திப்பு

“அங்கு ஒரே விஷயம் என்னவெனில் அதிக ரசிகர்களுக்கு முன்பு இந்திய சூழ்நிலைகளுக்கு விரைவாக உட்பட்டு நம்முடைய வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பது முக்கியமாகும். மேலும் உலகக் கோப்பைக்கான இறுதிக்கட்ட அணி அறிவிக்கப்பட்டதும் அந்த பெரிய தொடரில் நம்முடைய செயல்பாடுகள் சிறப்பாக மாறுவதற்கு துவங்கும்” என்று கூறினார்.

Advertisement