அமித் மிஸ்ராவை போன்றே தமிழக வீரர் சிறப்பாக பந்துவீசுகிறார்.. லக்னோ அணியின் பயிற்சியாளர் அளித்த பேட்டி

Langar
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வேலையில் நாளை மறுதினம் மார்ச் 22-ஆம் தேதி சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் முதல் போட்டியில் விளையாட இருக்கின்றன. இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் பலமான வீரர்களை தேர்வு செய்துள்ளதால் இந்த தொடரில் கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2022-ஆம் ஆண்டு அறிமுகமான லக்னோ அணி ஐ.பி.எல் தொடரில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்து வரும் வேளையில் அந்த அணியின் முக்கிய ஆலோசகரான கௌதம் கம்பீர் லக்னோ அணியிலிருந்து விலகி கே.கே/ஆர் அணிக்கு சென்றுள்ளதால் அந்த அணியின் நிர்வாகம் ஏமாற்றம் அடைந்துள்ளதாக பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் அறிமுகமான இரண்டு சீசன்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய லக்னோ அணி தற்போது கம்பீர் இல்லாத நிலையில் வேறொரு முக்கிய நிர்வாகியையும் நியமித்துள்ளது. கௌதம் கம்பீர் கொல்கத்தா அணிக்கு சென்றதால் வேறொரு ஆலோசகரை தேர்வு செய்த லக்னோ அணியானது தற்போது இளம் வீரர்களை வைத்து பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் ஜஸ்டின் லாங்கர் லக்னோ அணியில் இணைந்த பின்னர் தங்களது அணியின் செயல்பாடு குறித்தும் சில கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அந்த வகையில் லாங்கர் கூறுகையில் : எனக்கும் கௌதம் கம்பீருக்கும் இடையே எந்த மோதலும் கிடையாது. கேகேஆர் அணிக்கு கௌதம் கம்பீர் சென்றது எனக்கு ஏமாற்றம்தான்.

- Advertisement -

ஆனால் கே கே ஆர் அணியின் ஹீரோக்களில் கௌதம் கம்பீர் முதன்மையானவர். நாங்கள் எப்போதுமே சிறந்த நண்பர்கள் தான். ஐபிஎல் தொடரில் எனக்கு ஏராளமான நண்பர்கள் உள்ளனர். டெல்லி அணிக்கு பயிற்சியாளராக இருக்கும் ரிக்கி பாண்டிங், சிஎஸ்கே அணி பயிற்சியாளராக செயல்படும் பிளமிங், ஹசி ஆகியோரம் எனக்கு நண்பர்கள் தான். எனவே அவர்களுக்குள் எனக்கும் எந்த போட்டியும் கிடையாது.

இதையும் படிங்க : தோனியின் கண்களுக்கு அவர் அடுத்த சிஎஸ்கே கேப்டனாக தெரியுறாரு.. துணை கேப்டனா பாப்பீங்க.. ரெய்னா கணிப்பு

லக்னோ அணியில் ஏராளமான சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக ஸ்பின்னர்கள் என்னை மிகவும் அசர வைத்து விட்டார்கள். அந்த வகையில் அமித் மிஸ்ராவை போன்று ஒரு நல்ல லெக் ஸ்பின்னரே கிடையாது. தமிழக வீரர் சித்தார்த் பயிற்சி ஆட்டத்தில் மெய்டன் ஓவர் வீசியது மட்டும் இல்லாமல் என்னை ஆச்சரியப்படுத்தி விட்டார். கிருஷ்ணா கௌதம் என்னை ஆச்சரியபடுத்தும் அளவிற்கு விளையாடி வருகிறார் என்று ஜஸ்டின் லாங்கர் புகழ்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement