ரெக்கார்ட் மோசமா இருந்தாலும்.. சிஎஸ்கே’வை பும்ரா தெறிக்க விடுவாரு.. காரணம் இது தான்.. லாரா கருத்து

Brian Lara 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் ஏப்ரல் 14ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. தலா 5 கோப்பைகளை வென்று வரலாற்றின் வெற்றிகரமான அணிகளாக சாதனை படைத்துள்ள சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் இப்போட்டி ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் கடந்த காலங்களில் வெற்றி பெறுவதற்காக மிகவும் ஆக்ரோசத்துடன் மோதிக்கொண்ட இவ்விரு அணிகளும் ஐபிஎல் தொடரின் பரம எதிரிகளாக போற்றப்படுகின்றன. எனவே எம்எஸ் தோனி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக இம்முறை புதிய கேப்டன்களாக பொறுப்பேற்றுள்ள ருதுராஜ் – ஹர்டிக் பாண்டியா தலைமையில் வெற்றி பெறப்போவது யார் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

- Advertisement -

லாரா கருத்து:
இருப்பினும் வரலாற்றை புரட்டிப் பார்க்கும் போது சென்னைக்கு எதிராக மும்பை அதிக வெற்றிகளை பதிவு செய்து முன்னிலையில் வகிக்கிறது. மேலும் 2 அணிகளை ஒப்பிடும் போது ஜஸ்பிரித் பும்ரா எனும் மகத்தான பவுலரை கொண்டிருப்பது மும்பையை வலுப்படுத்துகிறது. ஏனெனில் சுமார் 400 ரன்கள் அடிக்கப்பட்ட கடந்த போட்டியில் கூட பெங்களூருவுக்கு எதிராக வெறும் 21 ரன்கள் மட்டும் கொடுத்த அவர் 5 விக்கெட்டுகள் எடுத்து மும்பையை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

ஆனால் அதே வரலாற்றை புரட்டும் போது சிஎஸ்கேவுக்கு எதிராக 14 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் வெறும் 12 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். மேலும் சிஎஸ்கேவுக்கு எதிராக 34.58 என்பது ஒரு அணிக்கு எதிராக பும்ராவின் 2வது மோசமான பவுலிங் சராசரியாகும். அதே போல 26.83 என்ற அவருடைய ஸ்ட்ரைக் ரேட் மற்ற அணிகளை விட சிஎஸ்கேவுக்கு எதிராக சுமாராகவே உள்ளது.

- Advertisement -

மொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக பும்ரா தடுமாற்றமாகவே செயல்பட்டு வருகிறார். ஆனால் தற்போதுள்ள ஃபார்முக்கு கண்டிப்பாக இப்போட்டியில் சிஎஸ்கேவை பும்ரா தெறிக்க விடுவார் என்று ஜாம்பவான் பிரைன் லாரா தெரிவித்துள்ளார் இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது போன்ற புள்ளிவிவரங்களுக்கு நான் கவனம் கொடுக்க மாட்டேன். ஏனெனில் அவருடைய தற்போதைய ஃபார்ம் நம்ப முடியாததாக இருக்கிறது”

இதையும் படிங்க: தோனி மாதிரி முக்கிய நேரத்தில் அசத்திய சாம்சன்.. டர்னிங் பாயிண்டாக மாறிய சம்பவம் – நடந்தது என்ன?

“சமீபத்தில் ரோமோரியா செபார்ட்’டிடம் பேசினேன். அப்போது வலைப்பயிற்சியில் பும்ராவிடம் தள்ளியே இருப்பதாக அவர் என்னிடம் சொன்னார். பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தி விக்கெட்டுகளை எடுக்கும் அவருடைய திறமை எதிரணிகளுக்கு அழுத்தத்தை கொடுக்கும். நம்ப முடியாத வகையில் செயல்படும் அவர் மும்பை அணியின் பெரிய சொத்தாவார். சிஎஸ்கே அணிக்கு எதிராக அவர் சிறப்பாக செயல்படாததைப் பற்றி நான் பார்க்க மாட்டேன். ஏனெனில் கடந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த அவர் இம்முறை சிஎஸ்கே பேட்டிங் வரிசைக்கு எதிராக கொடியவராக இருப்பார்” என்று கூறினார்.

Advertisement