இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் 3 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் 2 க்கு 1 என்ற கணக்கில் இந்த தொடரில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. நாளை துவங்க உள்ள நான்காவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலும் கூட இந்திய அணி உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடும். இதன் காரணமாக நாளைய போட்டி இந்திய அணிக்கு முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக ஜஸ்பிரித் பும்ரா நான்காவது போட்டியில் இருந்து சொந்த விவகாரம் காரணமாக விலகியதாக ஏற்கனவே பிசிசிஐ அதிகாரபூர்வமாக தகவல் ஒன்றினை அறிவித்து இருந்தது. தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடி வரும் பும்ராவிற்கு ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியின் போது ஓய்வு கொடுக்கப்பட்டது.
அந்த போட்டியில் பும்ராவிற்கு பதிலாக இளம்வீரர் முகமது சிராஜ் களமிறங்கி விளையாடினார் இதனால் 4-வது போட்டியிலும் இவரே விளையாடுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும் பும்ரா ஓய்வு வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதனால் நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த இரண்டு தொடரிலும் பும்ரா பங்கேற்க மாட்டார் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இந்திய அணியின் முக்கிய விக்கெட் டேக்கர் என்பதால் அவரின் இழப்பு ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை அளிக்கும் செய்தியாக மாறியுள்ளது.
இருப்பினும் விரைவில் அவர் ஒரு நல்ல செய்தியுடன் இந்திய அணியில் மீண்டும் இணைவார் என்று பி.சி.சி.ஐ தரப்பில் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.