ஜஸ்ப்ரீத் பும்ரா அணியில் இருந்து தீடீரென நீக்கப்பட்டதுக்கு இதுதான் காரணமா இருக்குமோ – இதை கவனிச்சீங்களா

Jasprit Bumrah
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது அண்மையில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணிக்கு எதிராக விளையாடியது. இந்த தொடரை இந்திய அணி ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் கைப்பற்றிய வேளையில் அடுத்ததாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற உள்ளது.

INDvsSL

- Advertisement -

இந்த தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி ஜனவரி 10-ஆம் தேதி நாளை கவுஹாத்தி மைதானத்தில் நடைபெற இருந்த வேளையில் இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ளனர். இதன்காரணமாக இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

அதேபோன்று கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து காயம் காரணமாக ஓய்வில் இருந்த இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ராவும் இந்த இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சேர்க்கப்பட்டார் என்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அறிவித்தது. ஆனால் இந்த ஒருநாள் தொடர் நாளை துவங்க இருக்கும் வேளையில் திடீரென பும்ரா மீண்டும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Bumrah 1

இப்படி திடீரென பும்ரா அணியில் இருந்து நீக்கப்பட என்ன காரணம் என்பது குறித்து பலரும் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் அவர் முழுவதுமாக குணமடையாமல் மீண்டும் அணிக்கு திரும்பினால் காயம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில்தான் அவர் மீண்டும் நீக்கப்பட்டுள்ளார் என்று தெரிகிறது.

- Advertisement -

ஏனெனில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக கட்டாயத்திற்கு மத்தியில் பும்ரா விளையாட வைக்கப்பட்டதால் காயத்தை சந்தித்து டி20 உலகக் கோப்பை தொடரினை தவறவிட்டு உலகக்கோப்பை தொடரில் இருந்தே வெளியேறினார். அதேபோன்று இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு முன்னர் பும்ரா அவசியம் என்றாலும் அவரை விரைவில் அணிக்கு கொண்டு வந்து மீண்டும் அவரை சர்வதேச போட்டிகளில் விளையாட வைத்து காயம் ஏற்பட்டு விட்டால் இந்த ஆண்டும் அவருக்கு பெரிய பின்னடைவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திடீர் ஓய்வை அறிவித்த சி.எஸ்.கே வீரர் – வெளியான உருக்கமான பதிவு

எனவே நிதானமாக அவர் காயத்திலிருந்து மீண்டு முழு உடற்தகுதியையும் பெற்று போட்டிகளில் பங்கேற்கும் அளவிற்கு ஃபிட்னஸ் உடன் இருந்தால் மட்டுமே அவர் அணிக்குள் வருவார் என்பதனால் மீண்டும் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Advertisement