சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திடீர் ஓய்வை அறிவித்த சி.எஸ்.கே வீரர் – வெளியான உருக்கமான பதிவு

Dwaine-Pretorius
- Advertisement -

கடந்த 2-3 ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பெரும்பாலான வீரர்கள் ஓய்வினை அறிவித்து வருகிறார்கள். இதற்கு காரணம் ஒரு ஆண்டில் பெரும்பாலான போட்டிகளை அவர்கள் உலகெங்கிலும் சென்று விளையாடுவதால் இப்படி ஒரு கடினமான முடிவை எடுக்க நேரிடுகிறது என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். அதிக அளவிலான போட்டிகளை அவர்கள் விளையாடுவதால் ஏற்படும் பணிச்சுமை காரணமாகவே பெரும்பாலானோர் இந்த முடிவை எடுப்பதாக தெரிகிறது.

dwaine pretorius

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே பல முன்னணி வீரர்கள் கடந்த ஆண்டு ஓய்வை அறிவித்த வேளையில் தற்போது தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்த நட்சத்திர ஆல்ரவுன்டரான டுவைன் பிரிட்டோரியஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வு முடிவினை அறிவித்துள்ளார்.

33 வயதான அவர் தென் ஆப்பிரிக்கா அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 2016 ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 30 டி20 போட்டிகள், 27 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் என மூன்று வகையான அணியிலுமே விளையாடி உள்ளார். அதுமட்டுமின்றி இரண்டு முறை தென்னாப்பிரிக்க அணிக்காக உலகக்கோப்பை தொடர்களிலும் அவர் பங்கேற்று விளையாடி உள்ளார்.

Dwaine Pretorius MS Dhoni

கடந்த 2022-ஆம் ஆண்டு சென்னை அணிக்காக ஐ.பி.எல் தொடரில் அறிமுகமாகிய டுவைன் பிரிட்டோரியஸ் 6 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்நிலையில் தனது 33 வது வயதில் அவர் திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் :

- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்பு நான் எனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடினமான முடிவை ஒன்றினை எடுத்தேன். அதன்படி அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் நான் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். எனது வாழ்க்கையில் தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு இருந்தது அது நிறைவேறிவிட்டது.

இதையும் படிங்க : வீடியோ : முதல் ஒருநாள் போட்டியில் இஷான் கிசான் – கில் ஆகியோரில் தம்முடன் களமிறங்கும் ஓப்பனர் அவர் தான் – ரோஹித் அறிவிப்பு

இனி நான் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இனிமேல் டி20 போட்டிகள் மற்றும் குறுகிய வடிவத்தில் உலகெங்கும் நடைபெறும் போட்டிகளில் விளையாட இருப்பதினால் இந்த முடிவை நான் எடுத்துள்ளேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் பெரும்பங்கு வகித்த அனைவருக்கும் நன்றி என நெகிழ்ச்சியுடன் அவர் தனது கருத்தினை பதிவிட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தாலும் இந்த ஆண்டு அவர் சி.எஸ்.கே அணிக்காக விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement