இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி நாளை துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் இருந்து முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா விலகியுள்ளார்.
காயம் காரணமாக விலகிய பும்ராவிற்கு பதிலாக உமேஷ் யாதவ் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளா.ர் மேலும் இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில் ஏற்கனவே குறிப்பிட்ட விடயமானது யாதெனில் : ஜஸ்பிரித் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரில் பங்கேற்க மாட்டார். மேலும் அவர் காயம் குணமடையும் வரை பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் அந்த மருத்துவ குழு அவரை தொடர்ந்து அவரை பரிசோதனை செய்து வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது முதுகில் ஏற்பட்ட காயம் பற்றிய முழுமையான ஆலோசனைகளுக்காக அவர் மேல் சிகிச்சைக்காக தற்போது இங்கிலாந்துக்கு செல்ல இருக்கிறார்.
இங்கிலாந்து செல்லும் அவருடன் தேசிய கிரிக்கெட் அகாடமி தலைமை பிசியோதெரபிஸ்ட் ஆசிஷ் கவுசிக் செல்ல இருப்பதாகவும், இங்கிலாந்தில் உள்ள மருத்துவர்களுடன் பும்ரா காயம் குறித்த ஆலோசனை நடைபெற இருப்பதாகவும் அதிகாரபூர்வமாக பிசிசிஐ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.