
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா கடந்த சில ஆண்டுகளாகவே காயத்தால் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்திருந்தார். ஆனாலும் 2025 ஐபிஎல் தொடரின் போது கம்பேக் கொடுத்திருந்த அவர் மீண்டும் ஏற்பட்ட காயத்தால் சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்திருந்தார். இந்நிலையில் தற்போது முழுவதுமாக காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள அவர் சிறப்பான ஃபார்மிற்கு திரும்பியுள்ளார்.
அந்த வகையில் அண்மையில் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சுப்மன் கில் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்திருந்த அவர் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் பணிச்சுமை காரணமாக மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தார். மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஓய்வெடுத்துக் கொண்டார்.
அதுமட்டுமின்றி இனிவரும் தொடர்களிலும் ஜஸ்ப்ரீத் பும்ராவை முக்கிய போட்டிகளில் தான் பயன்படுத்துவோம் என்றும் தேவையான போது அவருக்கு பணிச்சுமையை கருத்தில் கொண்டு ஓய்வு வழங்கப்படும் என்று இந்திய அணியின் நிர்வாகமும் அறிவித்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவர் முழுவதுமாக விளையாடுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போது சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியுடன் இணைந்து துபாய் பயணித்துள்ள அவர் அங்கு ஐசிசி கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் பயிற்சியினை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் எதிர்வரும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய டி20 அணியில் மீண்டும் இணைந்துள்ள அவர் தனது கம்பேக் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : உண்மையிலேயே மீண்டும் டி20 அணிக்கு மிகப்பெரிய இடைவெளிக்கு பிறகு திரும்பியதில் மகிழ்ச்சி. கடந்த மூன்று வாரங்களாகவே நான் நன்றாக நேரத்தை செலவிட்டேன்.
இதையும் படிங்க : இப்படி ஒரு திறமையான குரூப் எனக்கு கிடைச்சதுக்கு நான் ரொம்ப லக்கியா பீல் பண்றேன் – சூரியகுமார் யாதவ் பேட்டி
அதிலும் என்னுடைய வீட்டில் இருக்க நேரம் கிடைத்தது. தற்போது இந்திய அணியில் இளம் வீரர்கள் இருப்பதால் நல்ல புத்துணர்ச்சி இருக்கிறது. இந்த தொடரில் என்னுடைய சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் என ஜஸ்ப்ரீத் பும்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.