பர்ஸ்ட் பாலை போடும்போதே எனக்கு தெரிஞ்சி போச்சி. அதுவே நான் 6 விக்கெட் எடுக்க காரணம் – ஆட்டநாயகன் பும்ரா

Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணியை இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் தற்போது முன்னிலை வகிக்கிறது. ஏற்கனவே டி20 தொடரில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இங்கிலாந்து அணி பலமாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இங்கிலாந்து அணி நட்சத்திர பட்டாளத்தை கொண்டிருந்தாலும் இந்திய அணி தங்களது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அவர்களை வீழ்த்தியது.

Team India Jasprit Bumrah

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியானது துவக்கத்தில் இருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது ஒரு கட்டத்தில் 26 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதனால் இங்கிலாந்து அணி 100 ரன்களை கூட கேட்டது என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இறுதியில் ஒரு வழியாக சமாளித்து 110 ரன்களை குவித்தது. பின்னர் 111 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 18.4 ஓவர்களிலேயே விக்கெட் எதுவும் இழக்காமல் 114 ரன்களை அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய பும்ரா 7.2 ஓவர்களில் 3 மெய்டன் ஓவர்களை வீசி 19 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டை வீழ்த்தி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது மிகச் சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்தார். அதோடு அவரின் இந்த சிறப்பான பந்துவீச்சு காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் போட்டி முடிந்து தனது இந்த சிறப்பான பந்துவீச்சு குறித்து பேசியிருந்த பும்ரா கூறுகையில் : இந்த மைதானத்தில் நல்ல ஸ்விங்கும், வேகமும் இருந்தது. எனவே இந்த போட்டியில் நான் பந்து வீச மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்தேன். நான் இந்த மைதானத்தில் முதல் பந்தினை வீசும் போதே நல்ல ஸ்விங் இருந்தது எனக்கு நன்றாக தெரிந்தது.

- Advertisement -

அதன் காரணமாகவே அதனை பயன்படுத்தி விக்கெட்டுகளை கைப்பற்ற நினைத்தேன். ஒருவேளை இந்த மைதானத்தில் ஸ்விங் இல்லை என்றால் நான் என்னுடைய லைன் மற்றும் லென்த்தை மாற்றி என்னுடைய பலத்திற்கு ஏற்ப பந்துவீசி இருப்பேன். ஆனால் இந்த மைதானத்தில் பந்து நன்றாக ஸ்விங் ஆனது எனக்கு தெரிந்ததால் நான் பந்தினை சற்று மேலே பிட்ச்சாகும் படி வீசினேன். அதற்கு பரிசாக நிறைய விக்கெட்டுகளும் கிடைத்தது.

இதையும் படிங்க : IND vs ENG : அவரு இப்படி பவுலிங் பண்ணா நாங்க எப்படி ஜெயிப்போம் – தோல்விக்கு பிறகு இந்திய பவுலரை பாராட்டிய பட்லர்

அதோடு பந்து நன்றாக ஸ்விங் ஆனதால் ஷமியிடமும் நான் அது குறித்து தெரிவித்து பந்தை ஃபுல் லென்த்தில் விழும்படி வீச சொன்னேன், அவரும் அற்புதமாக அதன்படியே பந்து வீசினார். அதன் காரணமாகவே எங்களுக்கு நிறைய விட்கெட்டுகள் கிடைத்தது என்று ஆட்டநாயகன் பும்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement