IND vs ENG : அவரு இப்படி பவுலிங் பண்ணா நாங்க எப்படி ஜெயிப்போம் – தோல்விக்கு பிறகு இந்திய பவுலரை பாராட்டிய பட்லர்

Buttler
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியானது நேற்று லண்டன் கென்னிங்டன் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியிலும் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஏற்கனவே டி20 தொடரில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இங்கிலாந்து அணி இந்த முதலாவது ஒருநாள் போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Rohit and Dhawan

- Advertisement -

ஆனால் இங்கிலாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதலில் பேட்டிங் செய்து 110 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் 111 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியை அவர்களால் எந்த ஒரு விதத்திலும் கஷ்டப்படுத்தவே முடியவில்லை. இங்கிலாந்து அணியின் நிர்ணயத்தை 111 ரண்களை 18.4 ஓவர்களிலேயே விக்கெட் எதுவும் இழக்காமல் இந்திய அணி எளிதாக சேசிங் செய்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா மற்றும் ஷமி ஆகியோர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு பங்காற்றினர். அதே வேளையில் பேட்டிங்கிலும் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் கூறுகையில் :

IND vs ENG Jasprit Bumrah

இந்த நாள் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு கடினமான நாளாக அமைந்துவிட்டது. இந்த தோல்வி எங்களுக்கு தேவையான ஒன்றுதான். இந்த ஆட்டத்தின் துவக்கத்திலேயே மைதானம் சற்று மந்தமாக இருந்தது. அதனை இந்திய வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டனர். குறிப்பாக பவர்பிளே ஓவர்களில் இந்திய அணியின் பந்துவீச்சு அற்புதமாக இருந்தது.

- Advertisement -

இனிவரும் போட்டிகளில் இந்த இடத்தில் நாங்கள் சுதாரித்து விளையாட வேண்டியது அவசியம். எங்கள் அணியின் வீரர்கள் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடியிருந்தாலும் ஒருநாள் போட்டியில் அதனை தொடர தவறிவிட்டனர். பும்ரா ஒரு உலகத்தரம் வாய்ந்த பவுலர் என்பதை மீண்டும் ஒருமுறை எங்களது அணிக்கு எதிராக நிரூபித்து விட்டார். அவருடைய பந்துவீச்சு அபாரமாக இருந்தது என்றும் அவர் 6 விக்கெட்டை வீழ்த்தியது மிகச் சிறப்பான ஒன்று. அந்த பந்துவீச்சுக்கு அவர் தகுதியானவர்தான் என்று கூறினார்.

இதையும் படிங்க : IND vs ENG : நான் எடுத்த அந்த முடிவு மிகச்சரியானது. அபார வெற்றிக்கு பிறகு – ரோஹித் சர்மா பேசியது என்ன?

மேலும் துவக்கத்திலேயே அடுத்தடுத்து நாங்கள் விக்கெட்டுகளை இழந்ததால் எங்களால் அந்த சரிவிலிருந்து மீண்டு வர முடியவில்லை. இந்திய பவுலர்களின் அட்டகாசமான பந்துவீச்சே எங்களது தோல்விக்கு காரணம் என்று பும்ராவை பாராட்டி ஜாஸ் பட்லர் தோல்வி குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement