- Advertisement -
இந்திய கிரிக்கெட்

736 நாள் ஆச்சு.. இதெல்லாம் சரியா?.. பேசாம பும்ராவுக்கு ரிட்டயர்மென்ட் குடுத்துடுங்க – ரசிகர்கள் புலம்பல்

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா கடந்த 2016 ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 89 ஆட்டங்களில் விளையாடி 149 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். கடைசியாக 2023 ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பங்கேற்று விளையாடி இருந்தார்.

இதுக்கு பும்ராவுக்கு ரிட்டையர்மென்ட் குடுத்துடலாம் : ரசிகர்கள் புலம்பல்

அதன்பின்னர் தற்போது 736 நாட்களை கடந்தும் இதுவரை இந்திய ஒருநாள் அணிக்கு ஜஸ்ப்ரீத் பும்ரா திரும்பவில்லை. பணிச்சுமை காரணமாகவும், அடிக்கடி காயம் ஏற்படுவதை தவிர்ப்பதன் காரணமாகவும் பும்ராவிற்கு தேவையான போது ஓய்வு வழங்கி இந்திய அணி அவரை பயன்படுத்தி வருகிறது.

- Advertisement -

அதனால் சரியான இடைவெளிகளில் பும்ரா ஓய்வெடுத்துக் கொண்டு அவ்வப்போது பெரிய அணிகளுக்கு எதிராக நடைபெறும் தொடர்களில் மட்டுமே பங்கேற்று விளையாடி வருகிறார். தொடர்ந்து டெஸ்ட் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வரும் அவர் ஒருநாள் போட்டிகளில் விளையாடி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அண்மையில் அறிவிக்கப்பட்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் மீண்டும் அவர் எப்போது ஒருநாள் போட்டிக்கான அணி திரும்புவார்? என்று ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் கடைசியாக 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாடிய அவர் இரண்டு ஆண்டுகளாக ஒரு ஒருநாள் போட்டியில் கூட விளையாடவில்லை.

- Advertisement -

இவ்வேளையில் அடுத்ததாக 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் தான் அவரை விளையாட வைப்பீர்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இரண்டு ஆண்டுகளாக ஒருவர் ஒருநாள் போட்டிகளில் விளையாட வைக்காமல் தொடர்ச்சியாக நீங்கள் அவருக்கு ஓய்வு வழங்கி வருவதற்கு நீங்களாகவே வலுக்கட்டாயமாக ரிட்டயர்மென்ட் கொடுத்து விடலாம் என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

இதையும் படிங்க : ருதுராஜ் கெய்க்வாட் வேணாம்.. அந்த இடத்திற்கு யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தான் சரியா இருப்பார் – ஆகாஷ் சோப்ரா கருத்து

டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடும் பும்ரா ஒருநாள் தொடர்களிலும் இடம் பெற்று அனைத்து போட்டிகளிலும் விளையாடவில்லை என்றாலும் சரி ஓரிரு போட்டிகளிலாவது அவ்வப்போது விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது. ஏனெனில் ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை இளம் வேகப்பந்து வீச்சாளர்டன் இருந்து வரும் இந்திய அணிக்கு அனுபவம் வாய்ந்த பும்ரா போன்ற ஒரு வீரர் அவசியம் தேவை என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

- Advertisement -