3 ஜாம்பவான்களை பாத்து கத்துக்கிட்டேன்.. அந்த இங்கிலாந்து வீரருடன் போட்டி போடல.. ஆட்டநாயகன் பும்ரா பேட்டி

- Advertisement -

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை கொடுத்த இங்கிலாந்தை இப்போட்டியில் வீழ்த்திய இந்தியா 1 – 1* என்ற கணக்கில் தொடரை சமன் செய்து சொந்த மண்ணில் அவ்வளவு எளிதாக சாய்ந்து விட மாட்டோம் என்பதை நிரூபித்துள்ளது.

பிப்ரவரி இரண்டாம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஜெய்ஸ்வால் 209 ரன்கள் குவித்த உதவியுடன் 396 ரன்கள் எடுத்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து தங்களால் முடிந்தளவுக்கு போராடியும் 253 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 76 ரன்கள் இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா 6 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

வெற்றியே முக்கியம்:
அதை தொடர்ந்து 143 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியா சுப்மன் கில் 104 ரன்கள் குவித்த உதவியுடன் 399 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இறுதியில் அதை சேசிங் செய்த இங்கிலாந்து கடுமையாக முயற்சித்தும் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 292 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது. அந்தளவுக்கு பந்து வீச்சில் துல்லியமாக செயல்பட்ட இந்தியா சார்பில் அஸ்வின் மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்களை எடுத்தனர்.

இந்த வெற்றிக்கு ஜெய்ஸ்வால் 209 ரன்கள் அடித்தாலும் தேவைப்படும் நேரங்களில் முக்கிய விக்கெட்டுகளை எடுத்து மொத்தம் 9 விக்கெட்டுகள் சாய்த்து முக்கிய பங்காற்றிய பும்ரா ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். அத்துடன் இப்போட்டியில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையும் படைத்தார். இந்நிலையில் தமக்கு சாதனைகளை விட வெற்றியே முக்கியம் என்று தெரிவிக்கும் பும்ரா இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனுடன் தாம் எந்த வகையிலும் போட்டியிடவில்லை என கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஏற்கனவே சொன்னது போல் நான் சாதனைகளை பார்ப்பதில்லை. இளமையாக இருந்த போது அது எனக்கு ஆர்வத்தை கொடுத்தது. ஆனால் தற்போது அதுவும் ஒரு பகுதியாகும். இளம் வீரராக முதலில் நான் யார்கர் பந்துகளை வீசுவதற்கு கற்றுக் கொண்டேன். குறிப்பாக வகார் யூனிஸ், வாசிம் அக்ரம், ஜஹீர் கான் போன்ற ஜாம்பவான்களை நான் பார்த்துள்ளேன்”

இதையும் படிங்க: எங்க டீமோட சாம்பியன் பிளேயர் இவருதான்.. 2 ஆவது டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு பின்னர் – ரோஹித் சர்மா பேட்டி

“நாங்கள் அடுத்த தலைமுறையை நோக்கி நகர்வதால் எங்களின் இளம் வீரர்களுக்கு உதவி செய்யும் வேலை என்னுடையதாகும். ரோகித் சர்மாவுடன் நீண்ட காலமாக விளையாடுகிறேன். ஜேம்ஸ் ஆண்டர்சனை எப்போதும் போட்டியாக நினைப்பதில்லை. கிரிக்கெட்டுக்கு முன்பாக நான் வேகப்பந்து வீச்சின் ரசிகன். எனவே அவரைப் போன்றவர்கள் சிறப்பாக செயல்பட்டால் அதற்கு பாராட்டுக்கள். சூழ்நிலையை பார்த்து பிட்ச்சில் எனக்கு என்ன உதவி கிடைக்கும் என்பதற்காக செயல்படுகிறேன்” என்று கூறினார்.

Advertisement