அடுத்த போட்டியில் பும்ராவுக்கு பதில் அர்ஷ்தீப் சிங் விளையாடுவது உறுதி.. பயிற்சியில் ஏற்பட்ட நிகழ்வு – விவரம் இதோ

Bumrah and Arshdeep
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா அடிக்கடி காயத்தை சந்திப்பதால் அவருக்கு தேவையான போது ஓய்வினை வழங்கி முக்கியமான போட்டிகளில் மட்டுமே விளையாட வைக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஏனெனில் தொடர்ந்து அவர் நிறைய போட்டிகளில் விளையாடும் போது பணிச்சுமை காரணமாக மீண்டும் காயத்தினை சந்திக்கும் அபாயம் இருப்பதினால் அவருக்கு சரியான முறையில் ஓய்வினை வழங்கி அவரை முறைப்படி இந்திய அணியின் நிர்வாகம் கையாண்டு வருகிறது.

பும்ராவுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் விளையாடப்போவது உறுதி :

அந்த வகையில் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருந்த அவர் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று கூறப்பட்ட படியே அந்த தொடரில் அவர் மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தார்.

- Advertisement -

அதன்பிறகு கடந்த ஒரு மாதமாக ஓய்வில் இருந்த அவர் தற்போது மீண்டும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய டி20 அணியில் இடம்பிடித்து விளையாடி வருகிறார். இந்த ஆசிய கோப்பை தொடரிலும் அவர் சில போட்டிகளை பணிச்சுமை காரணமாக தவற விடுவார் என்றும் முக்கியமான போட்டிகளின் போது விளையாடுவார் என்றும் கூறப்பட்டிருந்தது.

அந்த வகையில் நடைபெற்று முடிந்த ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாடிய அவர் லீக் சுற்றின் கடைசி போட்டியில் ஓய்வெடுத்துக் கொள்வார் என்று பேசப்பட்டு வருகிறது. இந்தியா மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையேயான கடைசி லீக் போட்டியானது செப்டம்பர் 19-ஆம் தேதி அபுதாபி நகரில் நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்த போட்டியில் அவர் ஓய்வெடுத்துக் கொண்டால் சூப்பர் ஃபோர் சுற்றின் போது புத்துணர்ச்சியுடன் அணிக்கு திரும்புவார் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட உள்ளது. இந்நிலையில் இதனை உறுதி செய்யும் விதமாக ஒரு விடயம் வெளியாகி உள்ளது. அந்த வகையில் நாளை ஓமன் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டிக்காக இந்திய அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வரும் வேளையில் பந்துவீச்சு பயிற்சியினை பும்ரா தவிர்த்துள்ளார்.

இதையும் படிங்க : இந்திய அணியிலேயே எனக்கு பிடித்த வீரர் ரவீந்திர ஜடேஜா தான்.. காரணத்துடன் பாராட்டிய முன்னாள் இங்கி ஜாம்பவான்

மற்றபடி ஒரு சில வார்ம் உடற்பயிற்சிகளை மட்டுமே அவர் தினசரி நடவடிக்கைகளாக மேற்கொண்டுள்ளார். அதேவேளையில் மறுபுறம் அவருக்கு பதிலாக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் அர்ஷ்தீப் சிங் முழுவீச்சில் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதன் மூலம் நாளைய போட்டியில் பும்ராவிற்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் விளையாட இருப்பது உறுதியாகியுள்ளது.

Advertisement