பும்ரா ஆடுனா நானும் பேட்டிங் செய்ய வரேன்.. 2024 டி20 உ.கோ இந்தியாவுக்கு மரியாதை இல்லையா? அஜய் ஜடேஜா

Ajay jadeja
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. 2026 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இம்முறை அத்தொடர் 20 ஓவர் போட்டிகளாக நடைபெறுகிறது. அத்தொடரில் சூரியகுமார் தலைமையிலான இந்திய அணி தங்களுடைய முதல் போட்டியில் செப்டம்பர் 10ஆம் தேதி துபாயில் அமீரகத்தை எதிர்கொள்கிறது.

அந்தப் போட்டியில் கத்துக்குட்டியாக கருதப்படும் அமீரகத்தை தோற்கடித்து இந்தியா எளிதாக வெல்லும் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் ஐசிசி டி20 தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்கும் இந்தியா ஏற்கனவே 8 முறை ஆசியக் கோப்பைகளை வென்றுள்ளது. மேலும் 2024 டி20 உலகக் கோப்பையையும் வென்ற இந்தியா தற்சமயத்தில் டி20 கிரிக்கெட்டின் உலகச் சாம்பியனாக திகழ்கிறது.

- Advertisement -

பும்ராவை விளையாட வைத்தால்:

இந்நிலையில் அமீரக அணிக்கு எதிராக இந்திய அணி ஜஸ்ப்ரித் பும்ராவை விளையாட வைக்கக்கூடாது என்று முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார். ஏனெனில் 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு தொடர்நாயகன் விருது வென்ற முக்கிய பங்காற்றிய பும்ரா நம்பர் ஒன் பவுலராக திகழ்கிறார். அப்படிப்பட்ட பும்ரா காயத்தை சந்திக்கக் கூடாது என்பதற்காக இந்தியா அனைத்து போட்டிகளிலும் விளையாட வைப்பதில்லை.

எனவே கடந்த இங்கிலாந்து தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடிய பும்ராவை அமீரகத்துக்கு எதிராக வைக்கக்கூடாது என்று அஜய் ஜடேஜா கேட்டுக் கொண்டுள்ளார். ஒருவேளை பும்ராவை விளையாட வைத்தால் தாமும் பேட்ஸ்மேனாக வந்து அமீரகத்துக்கு எதிராக விளையாடுவேன் என்று ஜடேஜா கலக்கலப்பாக கூறியுள்ளார். இது பற்றி சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது.

- Advertisement -

நானும் வருவேன்:

“ஜஸ்ப்ரித் பும்ரா முதல் போட்டியில் விளையாடுவதற்கு என்னத் தேவையிருக்கிறது? பொதுவாக நீங்கள் அவரை பருத்தி கம்பளியில் பாதுகாக்கிறீர்கள். அப்படிப்பட்டவரை அமீரக அணிக்கு எதிராக நீங்கள் எதற்காக விளையாட வைக்க வேண்டும்? ஒன்று அவரை முழுமையாக பாதுகாத்து வையுங்கள் அல்லது அவருடைய பணிச்சுமையை நிர்வகிக்க விரும்பினால் இது போன்ற போட்டிகளில் ஓய்வளியுங்கள் அமீரகம் மீது அவமரியாதையாக நான் எதுவும் சொல்லவில்லை”

இதையும் படிங்க: சூரியகுமார் யாதவின் சாதனையை முறியடித்த ஆப்கனிஸ்தான் வீரர் – முதல் போட்டியே படு ஜோராக ஆரம்பம்

“ஏனெனில் அவர்களுடைய கேப்டன் முகமது வாசிம் பற்றி எனக்குத் தெரியும். டி20 கிரிக்கெட்டில் நீங்கள் எந்த அணியையுமே குறைவாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால் நம்முடைய இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்ற அணி. எனவே நான் தெளிவாக இருக்கிறேன். ஒருவேளை ஜஸ்ப்ரித் பும்ரா அமீரகத்துக்கு எதிராக விளையாடினால் நானும் பேட்டிங் செய்யச் செல்வேன்” என்று கூறினார்.

Advertisement