சூரியகுமார் யாதவின் சாதனையை முறியடித்த ஆப்கனிஸ்தான் வீரர் – முதல் போட்டியே படு ஜோராக ஆரம்பம்

SKY and Omarzai
- Advertisement -

2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது லீக் போட்டியானது நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியானது டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அந்த வகையில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 அவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை குவித்தது.

சூரியகுமார் யாதவின் சாதனையை முறியடித்த அஸ்மத்துல்லா ஓமர்சாய் :

அந்த அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் செதிகுல்லா அட்டல் 73 ரன்களையும், அஸ்மத்துல்லா ஓமர்சாய் 53 ரன்களையும் குவித்து அசத்தினர். அதன்பின்னர் 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஹாங்காங் அணியானது ஆப்கானிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் மட்டுமே குவித்தது.

- Advertisement -

இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணியானது 94 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக பசல் பரூகி மற்றும் குல்புதின் நயிப் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தனர்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆப்கானிஸ்தான் அணி சார்பாக விளையாடிய ஆல்ரவுண்டர் அஸ்மதுல்லா ஓமர்சாய் 21 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 53 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அவர் அடித்த இந்த 53 ரன்கள் மூலம் இந்திய அணியின் கேப்டனான சூரியகுமார் யாதவின் முக்கிய சாதனை ஒன்றினை தகர்த்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : ஆசிய கோப்பை போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர் என்று பட்டியலில் சூரியகுமார் யாதவ் முதலிடத்தில் இருந்தார். சூரியகுமார் யாதவ் கடந்த 2022-ஆம் ஆண்டு ஹாங்காங் அணிக்கு எதிராக 22 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார். அதுவே ஆசிய கோப்பை போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிவேக அரைசதமாக இருந்தது.

இதையும் படிங்க : இந்தியா ஆசிய கோப்பை ஜெய்க்கும்ன்னு சொல்ல முடியாது.. 4க்கு 3 வெற்றி மாதிரி பாகிஸ்தான் வெல்லும்.. சல்மான் பேட்டி

இவ்வேளையில் தற்போது அதே ஹாங்காங் அணிக்கு எதிராக ஓமர்சாய் 20 பந்துகளில் அரைசதம் அடித்து டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர் மற்றும் ஆசிய கோப்பையில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையும் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement