இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியானது தற்போது துபாய் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது பாகிஸ்தான் அணியானது முதலில் விளையாடி வருகிறது.
இந்த ரோல் இந்திய அணியில் எனக்கு பிடிச்சிருக்கு : ஜஸ்ப்ரீத் பும்ரா
தற்போது வரை பவர்பிளே ஓவர்களின் முடிவில் 6 ஓவர்களில் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணியானது விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாக பிரத்யேக பேட்டி ஒன்றில் இந்திய அணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா பங்கேற்றிருந்தார்.
அதில் தான் பவர்பிளே ஓவர்களில் மூன்று ஓவர்களை வீசுவது குறித்து சில கருத்துக்களை பகிர்ந்து இருந்தார். அந்த வகையில் அவர் கூறியதாவது : உண்மையிலேயே இந்திய டி20 அணியில் இப்படி ஒரு புதிய ரோல் எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி. என்னை பவர்பிலே சமயத்தில் மூன்று ஓவர்களை வீச வைக்க நிர்வாகம் விரும்புகிறது. அதனை ஏற்று நான் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன்.
இந்த ரோல் இந்திய அணியில் எனக்கு ஒரு புதிய விடயம் தான். ஏனெனில் இதுபோன்ற ஒரு ரோலில் நான் விளையாடி நீண்ட ஆண்டுகள் ஆகிறது. குறிப்பாக கடந்த 2016-ஆம் ஆண்டு நான் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானபோது இதுபோன்ற ஒரு ரோலை செய்திருந்தேன். அதன் பிறகு தற்போது ஒன்பது ஆண்டுகள் கழித்து இப்படி ஒரு ரோலை செய்து கொடுக்கிறேன்.
இந்திய அணியின் நிர்வாகம் என்னை எவ்வாறு பயன்படுத்த விரும்புகிறதோ அந்த வகையில் நான் பங்களிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறினார். ஆனால் இன்றைய இறுதிப்போட்டியில் பவர்பிளே ஓவர்களில் இரண்டு ஓவர்களை மட்டுமே வீசிய பும்ரா 18 ரன்களை விட்டுக் கொடுத்து விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் இருந்தார்.
இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியா இல்லை.. இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் ஏற்பட்டுள்ள மாற்றும் – சூரியகுமார் விளக்கம்
ஏற்கனவே லீக் போட்டியிலும் சரி, சூப்பர் போர் சுற்றிலும் சரி பாகிஸ்தான் அணியை இந்திய அணி எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றதால் இந்த போட்டியிலும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த இறுதி போட்டியானது இந்தியா பாகிஸ்தான் ரசிகர்களை தாண்டி உலக ரசிகர்கள் மத்தியிலும் கவனத்தினை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.



