ஹார்டிக் பாண்டியா இல்லை.. இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் ஏற்பட்டுள்ள மாற்றும் – சூரியகுமார் விளக்கம்

IND vs PAK
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதி போட்டியானது துபாய் சர்வதேச மைதானத்தில் சற்று முன்னர் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இறுதி போட்டிக்கான இந்திய அணியில் ஹார்டிக் பாண்டியா இல்லை :

இந்நிலையில் இந்த இறுதிப் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த போட்டியின் போது ஓய்வு எடுத்துக் கொண்ட பும்ரா மற்றும் ஷிவம் துபே ஆகியோர் மீண்டும் அணிக்குள் வந்துள்ளனர்.

- Advertisement -

அவர்களுக்கு பதிலாக இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகிய இருவரும் பிளேயிங் லெவனிலிருந்து வெளியேறியுள்ளனர். இப்படி இரண்டு மாற்றங்கள் நடைபெற்றது இயல்புதான். ஆனால் மூன்றாவது மாற்றமாக இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா கடந்த போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த போட்டியை தவற விட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக இடதுகை அதிரடி ஆட்டக்காரரும், பினிஷருமான ரிங்கு சிங் இடம் பிடித்துள்ளார். இந்த மூன்று மாற்றங்கள் தவிர்த்து கடைசி போட்டிக்கான இந்திய அணியில் வேறுயெந்த மாற்றமும் இல்லை. இந்நிலையில் இந்த இறுதி போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாடாதது குறித்து டாசின் போது பேசியிருந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில் : ஹர்திக் பாண்டியாவிற்கு சிறிய அளவிலான தசைப் பிடிப்பு ஏற்பட்டுள்ளதன் காரணமாக இந்த இறுதிப் போட்டியை தவறவிடுகிறார்.

- Advertisement -

அவருக்கு பதிலாக ரிங்கு சிங் அணிக்கு வருவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த தொடர்பு முழுவதுமே இந்திய அணி சார்பாக துவக்க ஓவர்களை வீசி வந்த ஹார்டிக் பாண்டியா பேட்டிங்கிலும் கை கொடுத்து வந்த வேளையில் இறுதி போட்டியில் அவர் விளையாடாதது இந்திய அணிக்கு ஒரு சிறிய பின்னடைவு தான். அதன்படி பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : இதை மட்டும் பண்ணா போதும்.. பாகிஸ்தானை ஈஸியா தோக்கடிக்கலாம் – ஆகாஷ் சோப்ரா கருத்து

1) அபிஷேக் சர்மா, 2) சுப்மன் கில், 3) சூரியகுமார் யாதவ், 4) திலக் வர்மா, 5) சஞ்சு சாம்சன், 6) ஷிவம் துபே, 7) ரிங்கு சிங், 8) அக்சர் படேல், 9) குல்தீப் யாதவ், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) வருண் சக்கரவர்த்தி.

Advertisement