2025 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியானது செப்டம்பர் 28-ஆம் தேதியான இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்த காத்திருக்கின்றன. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற லீக் சுற்று போட்டி மற்றும் சூப்பர் போர் சுற்று போட்டி என இரண்டிலுமே இந்திய அணி அசத்தலான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணியை வீழ்த்த இதை செய்யுங்க : ஆகாஷ் சோப்ரா
இதன் காரணமாக இந்த இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது. அதோடு நடப்பு சாம்பியராக இந்த தொடருக்குள் காலடி எடுத்து வைத்த இந்திய அணியானது இதுவரை எந்த ஒரு தோல்வியையும் சந்திக்கவில்லை எனவே இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று தோல்வியையே சந்திக்காமல் ஆசிய கோப்பை வென்று மீண்டும் நாடு திரும்பும் என்று ரசிகர்களும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இன்று நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டுமெனில் பாகிஸ்தான் அணியை பவர்பிளே ஓவர்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா சில ஆலோசனைகளை கூறியுள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் அவர்களை பவர்பிளே ஓவர்களுக்குள் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டால் பாகிஸ்தான் அணி அதிலிருந்து மீண்டு வரவே முடியாது. நம்மால் எளிதில் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த முடியும்.
அதேபோன்று ஒருவேளை நாம் முதலில் பேட்டிங் செய்ய நேர்ந்தால் பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாட வேண்டும். முதல் 6 ஓவர்களில் சுப்மன் கில் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் கொடுக்கும் அதிரடியான துவக்கம் இந்திய அணியை பலமாக இடத்திற்கு கொண்டு செல்லும்.
இதையும் படிங்க : 5 மேட்ச்ல வெறும் 71 ரன்ஸ்.. என்ன பேட்டிங் இது? ப்ளீஸ் இதை சேஞ்ச் பண்ணுங்க.. சூர்யகுமாருக்கு – இர்பான் பதான் கேள்வி
எனவே இந்த போட்டியை பொறுத்தவரை முதல் ஆறு ஓவர்கள் தான் ஆட்டத்தின் போக்கை நிர்ணயிக்கும் என்றும் அதில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி விட்டால் பாகிஸ்தான் அணியை எளிதாக வீழ்த்தி விடலாம் என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.



