5 மேட்ச்ல வெறும் 71 ரன்ஸ்.. என்ன பேட்டிங் இது? ப்ளீஸ் இதை சேஞ்ச் பண்ணுங்க.. சூர்யகுமாருக்கு – இர்பான் பதான் கேள்வி

Irfan Pathan and SKY
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியகுமார் யாதவ் 717 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். இப்படி ஐபிஎல் போட்டிகளில் அசத்திய அவர் சர்வதேச டி20 போட்டிகளில் சமீபகாலமாகவே ஏமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது பலரது மத்தியிலும் பேசு பொருளாக மாறியுள்ளது. அதிலும் குறிப்பாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலும் அவரது ஆட்டம் இதுவரை மோசமாகவே இருந்து வருகிறது.

சூரியகுமார் யாதவ் தனது தவறை திருத்தனும் : இர்பான் பதான்

குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி இறுதி போட்டிக்கு சென்றிருந்தாலும் இந்த தொடரின் 5 போட்டிகளில் விளையாடியுள்ள கேப்டன் சூர்யகுமார் யாதவ் 71 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். அதிலும் குரூப் சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் அடித்த அவர் மற்ற நான்கு போட்டிகளில் சேர்த்து 24 ரன்களை மட்டுமே குவித்துள்ளார்.

- Advertisement -

அவரது இந்த மோசமான பேட்டிங் ஃபார்ம் குறித்து சில கேள்விகளும் எழுந்துள்ளன. இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இறுதி போட்டிக்கு முன்னதாக அவரது பேட்டிங் ஃபார்ம் குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் கூறுகையில் : சூரியகுமார் யாதவ் சிறப்பாக பேட்டிங் செய்தால் அது அவருடைய கேப்டன்சிக்கும் உதவும். ஆனால் அவர் தற்போது பேட்டிங்கில் மிகவும் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.

அதிலும் குறிப்பாக ஸ்வீப் ஷாட் ஆட முற்பட்டே அவர் தொடர்ச்சியாக ஆட்டமிழந்து வருகிறார். ஐபிஎல் தொடரில் ரன்கள் அடித்ததெல்லாம் சரி ஆனால் சர்வதேச போட்டிகள் என்று வரும்போது இந்திய அணிக்காகவும் ரன்களை குவிக்க வேண்டும். இந்த ஆசிய கோப்பை தொடரில் அவர் தொடர்ச்சியாக ஸ்வீப் ஷாட்களை அடிக்க முயற்சித்தே ஆட்டமிழந்து வருகிறார். அதனை கணித்து அனைத்து அணிகளும் அவருக்கு எதிராக அதேபோன்ற யுக்தியை பயன்படுத்தி வருகின்றன.

- Advertisement -

அவர் அதனை நிச்சயம் மாற்றிக் கொள்ள வேண்டும். தற்போது நீங்கள் பார்மில் இல்லை என்றால் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக முதலில் நேராக அடித்து ரன்களை சேர்த்து உங்களுடைய ரிதத்தை பிடித்துக் கொள்ளுங்கள். அதன்பின்னர் நிச்சயம் உங்களது பேட்டிங்கில் மிகச் சிறப்பான செயல்பாடு வெளிப்படும் என்று சூரியகுமார் யாதவிற்கு இர்பான் பதான் ஆலோசனையும் வழங்கியுள்ளார்.

இதையும் படிங்க : பைனலில் இப்படி ஆடுங்க.. கேப்டன் சூரியகுமார் யாதவுக்கு அட்வைஸ் குடுத்த கவாஸ்கர் – விவரம் இதோ

இர்பான் பதான் கூறியது போலவே : கடைசியாக சூரியகுமார் யாதவ் விளையாடிய 10 டி20 போட்டிகளில் வெறும் 99 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். அதுமட்டும் இன்றி கேப்டனாக அவர் பொறுப்பேற்று விளையாடியுள்ள 19 ஆட்டங்களில் 2 அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ள அவர் மொத்தமாக 329 ரன்களை மட்டுமே குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement