IND vs AUS : 2வது போட்டிக்கு திரும்பும் நம்பிக்கை நட்சத்திர பவுலர் – அப்போ இந்தியாவின் வெற்றி கன்பார்ம்? ரசிகர்கள் மகிழ்ச்சி

INDIA IND vs ENG Rohit Sharma
- Advertisement -

சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்தியா கோப்பையை வெல்வதற்காக கடைசி 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது. சமீபத்திய ஆசிய கோப்பையில் பைனலுக்குக் கூட செல்ல முடியாமல் வெளியேறிய இந்தியா நம்பர் ஒன் டி20 அணியாக இருந்தும் மொகாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் 209 ரன்களை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு படு மோசமாக பந்து வீசி தோல்வியை சந்தித்தது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது. இருப்பினும் உலகத்தரம் வாய்ந்த வீரர்களை கொண்டுள்ள இந்தியா அடுத்ததாக செப்டம்பர் 23ஆம் தேதியன்று நாக்பூரில் நடைபெறும் 2வது போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பாதைக்கு திரும்ப போராட உள்ளது.

Mathew Wade

- Advertisement -

முன்னதாக முதல் போட்டியில் சம்பந்தமின்றி 3 வருடங்கள் கழித்து கொண்டு வரப்பட்ட உமேஷ் யாதவ், காயத்திலிருந்து திரும்பிய ஹர்ஷல் படேல் ஆகியோர் பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கினர். அவர்களை விட பொறுப்புடன் செயல்பட வேண்டிய சீனியர் புவனேஸ்வர் குமார் 19வது ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட போது 18 ரன்களை கொடுத்தது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதனால் உலகக் கோப்பைக்கு முன்பாக டெத் ஓவர்களில் பலவீனமாக இருக்கும் இந்திய பந்து வீச்சை ஆஸ்திரேலியா அம்பலப்படுத்தியுள்ளது இந்திய ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

திரும்பும் பும்ரா:
முன்னதாக முதல் போட்டியில் ரன்களை வாரி வழங்கி தோல்வியடைந்த போது நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா இல்லையே என்று அனைவரும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். ஏனெனில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அனைத்து நேரங்களிலும் சிறப்பாக பந்து வீசக் கூடிய இந்தியாவின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் அவர் சமீபத்திய இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் சந்தித்த காயத்தால் விலகியது ஆசிய கோப்பையின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

Jasprit Bumrah

இருப்பினும் காயத்திலிருந்து குணமடைந்த அவர் உலக கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன்பாக நடைபெறும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா தொடரிலும் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் காயத்திலிருந்து குணமடைந்து வரும் அவரை உடனடியாக களமிறக்கி ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்பதாலேயே முதல் போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.

- Advertisement -

இருப்பினும் இப்போது வாழ்வா சாவா என்ற நிலைமை வந்து விட்டதால் நாக்பூரில் நடைபெறும் 3வது போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா களமிறங்குவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இது பற்றி பிசிசிஐ நிர்வாகி ஒருவர் பேசியது பின்வருமாறு. “காயத்திலிருந்து திரும்பிய அவரை அணி நிர்வாகம் அவசரப்படுத்த விரும்பவில்லை என்பதாலேயே மொஹாலி போட்டியில் களமிறங்கவில்லை. இருப்பினும் வலைப்பயிற்சியில் அற்புதமாக செயல்பட்டு வரும் அவர் தற்போது களமிறங்க தயாராகியுள்ளார்” என்று கூறினார்.

Team India Jasprit Bumrah

ரசிகர்கள் மகிழ்ச்சி:
முன்னதாக ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது தங்களுக்கு பெரிய பின்னடைவை கொடுத்ததாக முதல் போட்டியில் தோல்வியடைந்த பின் ஹர்திக் பாண்டியா தெரிவித்திருந்தது பின்வருமாறு. “ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் காயத்திலிருந்து குணமடைந்தது திரும்பியுள்ள அவருக்கு போதிய கால அவகாசம் தேவைப்படுகிறது. அதனால் அவர் மீது அதிகப்படியான அழுத்தத்தை போடுவதற்கு நாங்கள் விரும்பவில்லை” என்று கூறினார்.

இதை தொடர்ந்து நாக்பூரில் நடைபெறும் 2வது போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா களமிறங்குவது உறுதியாகியுள்ளது. மேலும் புவனேஸ்வர் குமார் சீனியர் என்ற நிலைமையில் ஹர்ஷல் பட்டேலும் இப்போது தான் காயத்திலிருந்து குணமடைந்து திரும்பியுள்ளார் என்பதால் சம்பந்தமின்றி 3 வருடங்கள் கழித்து தேர்வு செய்யப்பட்டு சொதப்பலாக பந்து வீசிய உமேஷ் யாதவுக்கு பதில் அவர் களமிறங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டியில் டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கியது பெரிய பின்னடைவை ஏற்படுத்திய நிலையில் தற்போது “டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்” என்றழைக்ப்படும் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்புவது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.

Bumrah

அத்துடன் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் அடுத்து வரும் அனைத்து போட்டிகளிலும் அவர் தொடர்ச்சியாக விளையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 2வது போட்டியில் கிட்டதட்ட வெற்றி உறுதியென்று மகிழ்ச்சி தெரிவிக்கும் ரசிகர்கள் சொந்த மண்ணில் தலை குனிய வைத்த ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

Advertisement