- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஜஸ்ப்ரீத் பும்ரா ஆசிய கோப்பை தொடர்ல ஆடுவாரு.. ஆனா ஒரு கண்டிஷன் – வெளியான தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா இங்கிலாந்தில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியிருந்தார். அந்த தொடரில் பணிச்சுமை காரணமாக முழு தொடரிலும் விளையாடாத அவர் நிர்வாகம் கூறியபடியே மூன்று போட்டிகளில் மட்டும் விளையாடியிருந்தார்.

ஜஸ்ப்ரீத் பும்ரா ஆசிய கோப்பை தொடரில் ஆடுவார் :

இந்நிலையில் எதிர்வரும் 2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை தொடரில் ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாடுவாரா? மாட்டாரா? என்பதே பலரது கேள்வியாகவும் உள்ளது. ஏனெனில் சமீப காலமாகவே காயத்தால் அதிகளவு போட்டிகளில் விளையாடாத அவர் பணிச்சுமையை காரணம் காட்டி அவ்வப்போது ஓய்வெடுத்து வருகிறார். இதன் காரணமாக அவர் ஆசிய கோப்பை தொடரில் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

- Advertisement -

எதிர்வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் செப்டம்பர் 28-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கின்றன. இந்த தொடருக்கான இந்திய அணியின் தேர்வு வெகு விரைவில் நடைபெற்று அந்த தொடருக்கான இந்திய அணி அதிகாரப்பூர்வமாக ஆகஸ்ட் 20-ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் எதிர்வரும் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நிச்சயம் ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் கடைசியாக 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடியிருந்த அவர் அதற்கு பிறகு டி20 போட்டியில் விளையாடவில்லை.

- Advertisement -

எனவே இது அவருக்கு சரியான கம்பேக் நேரமாக இருக்கும் என்று நிர்வாகம் நினைக்கிறது. அதோடு இந்த ஆசிய கோப்பை தொடரில் அவர் விளையாடினால் அடுத்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் இதனை சரியாக திட்டமிட்டுள்ள பிசிசிஐ அவருக்கு ஆசிய கோப்பை தொடரில் விளையாட ஒரு கண்டிஷனையும் வைத்துள்ளது.

இதையும் படிங்க : சூரியகுமார் யாதவ் விளையாட முடியாமல் போனால் ஆசிய கோப்பைக்கான கேப்டன் யார்? – விவரம் இதோ

அதாவது ஆசிய கோப்பை தொடரில் பும்ரா விளையாடினால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது ஓய்வு கொடுத்து விட்டு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட வைக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஆசிய கோப்பை தொடரில் பும்ரா விளையாடுவது உறுதியாகியுள்ளது.

- Advertisement -