- Advertisement -
இந்திய கிரிக்கெட்

121 ரன்ஸ்.. ஷமியை முந்தி ஜவகள் ஸ்ரீநாத் சாதனையை சமன் செய்த பும்ரா.. வலுவான நிலையில் இந்தியா

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டி அகமதாபாத் நகரில் அக்டோபர் இரண்டாம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதை அடுத்தது விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியை நன்றாக பவுலிங் செய்த இந்திய அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு யாருமே அரை சதமடிக்காத நிலையில் அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 32, ஷாய் ஹோப் 26, கேப்டன் சேஸ் 24 ரன்கள் எடுத்தனர். இந்திய கிரிக்கெட் அணிக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 2, ஜஸ்ப்ரித் பும்ரா 3, முகமது சிராஜ் 4 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

அசத்தும் இந்தியா:

அடுத்ததாக ஆட்டத்தைத் துவங்கிய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் நிதானமாக விளையாடினார். எதிர்ப்புறம் 7 பவுண்டரிகளை பறக்க விட்ட ஜெய்ஸ்வால் 68 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து 36 (54) ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த சாய் சுதர்சன் 7 ரன்னில் கேப்டன் ரோஸ்டன் சேஸ் சுழலில் சிக்கினார்.

இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக விளையாடிய கேஎல் ராகுல் அரை சதத்தை அடித்தார். அப்போது நிறைவுக்கு வந்த முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 121/2 ரன்கள் எடுத்துள்ள இந்திய அணிக்கு களத்தில் ராகுல் 53*, கேப்டன் சுப்மன் கில் 18* ரன்களுடன் உள்ளனர். தற்சமயத்தில் 8 விக்கெட்டுகள் விக்கெட் கைவசம் வைத்துள்ள இந்தியா 41 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளதால் இந்தப் போட்டியில் வலுவான துவக்கத்தைப் பெற்றுள்ளது என்றே சொல்லலாம்.

- Advertisement -

ஜஸ்ப்ரித் பும்ரா சாதனை:

முன்னதாக இந்தப் போட்டியையும் சேர்த்து உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராக ஜொலிக்கும் ஜஸ்ப்ரித் பும்ரா இந்திய மண்ணில் 1746 பந்துகளில் 50* விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதன் வாயிலாக இந்திய மண்ணில் மிகவும் குறைந்த பந்துகளில் 50 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார். அந்தப் பட்டியல் (பந்துகள்):
1. ஜஸ்ப்ரித் பும்ரா: 1746*
2. முகமது ஷமி: 2267
3. ஹர்பஜன் சிங்: 2272

இதையும் படிங்க: ஐஸ்ப்ரீத் பும்ரா வழி கொடுத்தும் அந்த ஒரு முக்கிய விக்கெட்டை வீழ்த்த தவறிய முகமது சிராஜ் – என்ன நடந்தது?

அத்துடன் இந்தியாவில் அவர் 24 இன்னிங்ஸில் 50 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதன் வாயிலாக இந்தியாவில் வேகமாக 50 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளர் என்ற ஜவகள் ஸ்ரீநாத் சாதனையையும் ஜஸ்ப்ரித் பும்ரா சமன் செய்துள்ளார். அந்தப் பட்டியல் (இன்னிங்ஸ்):
1. ஜஸ்ப்ரித் பும்ரா/ஜவகள் ஸ்ரீநாத்: தலா 24
2. கபில் தேவ்: 25
3. இஷாந்த் சர்மா/முகமது ஷமி: தலா 27

- Advertisement -