ஐஸ்ப்ரீத் பும்ரா வழி கொடுத்தும் அந்த ஒரு முக்கிய விக்கெட்டை வீழ்த்த தவறிய முகமது சிராஜ் – என்ன நடந்தது?

Siraj and Bumrah
- Advertisement -

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியானது அக்டோபர் இரண்டாம் தேதியான இன்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோஸ்டன் சேஸ் முதலில் தங்களது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

சாதனையை தவறவிட்ட முகமது சிராஜ் :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 44.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களை மட்டுமே குவித்தது. டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோஸ்டன் சேஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது இந்த சரிவுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது முதல் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களை குவித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் 14 ஓவர்களை வீசி 40 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார்.

ஆனாலும் இந்த போட்டியின் போது அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பை தவறவிட்டார். அதிலும் குறிப்பாக முகமது சிராஜ் ஏற்கனவே நான்கு விக்கெட்டுகளை எடுத்திருந்த வேளையில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் ஒரு கட்டத்தில் 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

- Advertisement -

இதன் காரணமாக முகமது சிராஜ் ஐந்தாவது விக்கெட் எடுக்க வேண்டும் என்பதனால் சுப்மன் கில் அவருக்கு தொடர்ச்சியாக ஓவர்களை வழங்கி வந்தார். அதே வேளையில் எதிர்ப்புறம் ஜஸ்ப்ரீத் பும்ரா ஒன்பதாவது விக்கெட்டையும் வீழ்த்திவிட பின்னர் கடைசி விக்கெட்டை சிராஜ் தான் எடுக்க வேண்டும் என்பது போன்று பும்ரா யார்க்கர் பந்துகளை வீசாமல் வெளியிலேயே தொடர்ந்து பந்துகளை வீசி வந்தார்.

இதையும் படிங்க : சச்சின், ஸ்மித் போனில் கொடுத்த.. இந்த ஆலோசனையே இங்கிலாந்தில் 754 ரன்ஸ் அடிக்க காரணம்.. கில் பேட்டி

ஆனால் முகமது சிராஜால் கடைசி வரை அந்த ஐந்தாவது விக்கெட்டை எடுக்க முடியவில்லை. பின்னர் குல்தீப் யாதவ் மீண்டும் ஸ்பெல்லிற்கு வந்து ஒரே பந்தில் கடைசி விக்கெட்டை வீழ்த்தியதால் முகமது சிராஜ் 5 விக்கெட் வீழ்த்தம் வாய்ப்பை தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement