
இந்திய அணியானது அண்மையில் சொந்த மண்ணில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்று விளையாடி இருந்தது. அதனை தொடர்ந்து அடுத்த மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது.
அதற்கு முன்னதாக இந்திய அணியில் இடம் பெற்றுள்ள அனைத்து வீரர்களும் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் பிரபல உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். ஆனால் இந்த விஜய் ஹசாரே தொடருக்கான போட்டிகளில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாடாமல் இருந்து வருகிறார்.
ஏனெனில் எதிர்வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும், டி20 உலக கோப்பை தொடரிலும் அணியின் முக்கிய வீரராக அவர் பார்க்கப்படுகிறார். எனவே உள்ளூர் போட்டியில் விளையாடி அவர் காயத்தை சந்தித்தால் அது நிச்சயம் இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறும். இதன் காரணமாக அவருக்கு பிசிசிஐ இந்த உள்ளூர் தொடரில் விளையாட வேண்டாம் என்று அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை கருத்தில் கொண்டும், டி20 உலக கோப்பை தொடரை கருத்தில் கொண்டும் ஜஸ்ப்ரீத் பும்ரா எடுத்துள்ள ஒரு புதிய முடிவு அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
அந்த வகையில் நியூசிலாந்து தொடர் ஆரம்பிப்பதற்கு இன்னும் 20 நாட்கள் மேல் இருப்பதால் பயிற்சி விட்டுப் போகக்கூடாது என்று கருத்தில் கொண்டு தற்போது அவருடைய சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் தொடர்ந்து பந்துவீச்சு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஏனெனில் தொடர்ந்து டச்சில் இருந்தால் மட்டுமே ரிதம் சரியாக இருக்கும் என்பதற்காகவே அவர் இந்த முடிவு எடுத்து வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதையும் படிங்க : இது முடிவு கிடையாது.. இன்னும் ஸ்ட்ராங்கா அவர் கம்பேக் கொடுப்பாரு.. சுப்மன் கில் குறித்து – ஹர்பஜன் கருத்து
தற்போது விஜய் ஹசாரே தொடர் நடைபெற்று வரும் அதே மைதானத்தில் அவரும் இளம் வீரர்களுடன் இணைந்து பயிற்சி செய்வது அம்மாநில இளம் வீரர்களுக்கும் ஊக்குவிக்கும் வகையில் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.