பயிற்சியாளருக்கே பாடம்.. ஜெயவர்தனே சொன்னதை கேட்காத பும்ரா.. ஒரே பந்தில் வெற்றியை பறித்த மாஸ் சம்பவம்

Jasprit Bumrah 2
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் குஜராத்தை 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த மும்பை குவாலிபயர் 2 போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது. முள்ளான்பூரில் மே 30ஆம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய மும்பை 229 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 81, ஜானி பேர்ஸ்டோ 47, சூரியகுமார் யாதவ் 33, திலக் வர்மா 25, ஹர்டிக் பாண்டியா 22* ரன்கள் அடித்தனர்.

அடுத்து விளையாடிய குஜராத்துக்கு கேப்டன் கில் 1 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த குசால் மெண்டிஸ் 20 (10) ரன்னில் ஹிட் விக்கெட் முறையில் பெவிலியன் திரும்பினார். அப்போது துவக்க வீரர் சாய் சுதர்சனுடன் ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடினார். தமிழகத்தைச் சேர்ந்த இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து குஜராத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தது.

- Advertisement -

கேட்காத பும்ரா:

அப்போது பதற்றமடைந்த மும்பை அணியின் பயிற்சியாளர் மகிலா ஜெயவர்தனே பௌண்டரி எல்லை அருகே வந்த ஜஸ்ப்ரித் பும்ராவிடம் அடுத்த ஓவரில் எப்படியாவது விக்கெட்டை எடுப்பதற்காக சில ஆலோசனைகளை சொல்ல முயன்றார். ஆனால் அப்போது “எதுவும் சொல்லி என்னை குழப்பாதீர்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்ற வகையில் அவருடைய ஆலோசனைகளை பும்ரா கேட்க மறுத்து விட்டார்.

தொடர்ந்து ஜெயவர்தனே சில ஆலோசனைகளை சொல்ல முயற்சித்தார். அதைக் கேட்காத ஜஸ்ப்ரித் பும்ரா பௌண்டரி எல்லையை விட்டு கொஞ்சம் தள்ளி சென்று நின்று கொண்டார். அடுத்த ஓவரை கேப்டன் ஹர்திக் பாண்டியா அவரிடம் கொடுத்தார். அந்த ஓவரின் 4வது பந்தில் வாஷிங்டன் சுந்தர் கால்களுக்கு நடுவே துல்லியமான யார்கர் பந்தை வீசிய ஜஸ்ப்ரித் பும்ரா ஸ்டம்ப்புகளை பறக்க விட்டு விக்கெட்டை எடுத்தார்.

- Advertisement -

பயிற்சியாளருக்கே பாடம்:

அவருடைய வேகத்திற்கு பதில் சொல்ல முடியாத வாஷிங்டன் சுந்தர் களத்திலேயே விழுந்து எழுந்து 48 (24) ரன்னில் அவுட்டாகி சென்றார். அந்த வகையில் “அதையும் இதையும் சொல்லி குழப்பாமல் இருந்தால் நானே விக்கெட்டை எடுப்பேன்” என்பதை நிரூபித்த ஜஸ்ப்ரித் பும்ரா ஜாம்பவானான ஜெயவர்தனேவுக்கு மாஸ்டர் கிளாஸ் பாடம் எடுத்தார் என்றே சொல்லலாம். அடுத்த சில ஓவரில் சாய் சுதர்சனும் 80 ரன்னில் கிளீசன் வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

இதையும் படிங்க: மும்பை வீட்டுமனை மாதிரி.. குஜராத்தை சாய்க்க பும்ரா தான் ஹெல்ப் பண்ணாரு.. கேப்டன் பாண்டியா பாராட்டு

இறுதியில் ரூதர்போர்ட் 24, ஷாருக்கான் 13, ராகுல் திவாடியா 16* ரன்கள் எடுத்த போதிலும் ஃபினிஷிங் செய்யத் தவறினார். அதனால் 20 ஓவரில் 208/6 ரன்களை மட்டுமே எடுத்த குஜராத் தோல்வியை சந்தித்து தொடரிலிருந்து வெளியேறியது. அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகள் எடுத்த மும்பை அணி குவாலிபயர் 2இல் பஞ்சாப்பை எதிர்கொள்ள உள்ளது.

Advertisement