எப்போவும் ஜெய்க்க முடியாது.. அவங்க பெயரை பாத்து பயந்தா முடிஞ்ச்சு.. சச்சினின் 2013 அட்வைஸ் பற்றி பும்ரா

Jasprit Bumrah
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் ஆரம்பத்தில் தோல்விகளால் 9வது இடத்தில் தடுமாறியது. ஆனால் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா காயத்திலிருந்து குணமடைந்து வந்ததும் தொடர்ந்து 6 வெற்றிகளை பெற்றுள்ள அந்த அணி பிளே ஆஃப் சுற்றை நெருங்கியுள்ளது. அந்தளவுக்கு அபாரமாக பவுலிங் செய்யும் பும்ரா தன்னை நம்பர் ஒன் பவுலர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

இந்நிலையில் கிரிக்கெட்டில் யாராலும் அனைத்து நாட்களிலும் அனைத்தையும் கட்டுப்படுத்தி வெற்றிகரமாக செயல்பட முடியாது என ஜஸ்ப்ரித் பும்ரா கூறியுள்ளார். அதற்காக பேட்ஸ்மேன்களுக்கு பயந்தால் தோல்வி உறுதியாக கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் 2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான போது ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தமக்கு வழங்கிய ஆலோசனை பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

பயந்தா முடிஞ்ச்சு:

“நான் யாருக்காகவும் பயப்படுவதில்லை. அதே சமயம் நான் தனிநபர் வீரர்களையும் கிரிக்கெட்டையும் மதிக்கிறேன். பேட்ஸ்மேனை பார்த்து பயந்து அல்லது என்னை விட அவர் சிறந்தவர் என்று நினைத்து மனதளவில் இடம் கொடுத்தால் அங்கேயே தோற்று விடுவேன். எனவே அப்படி இல்லாமல் இருந்தால் போதும். எனக்கு மோசமான நாள் அமைந்தாலும் ரன்கள் கொடுத்தாலும் யாரும் என்னை தோற்கடிக்க போவதில்லை”

“அதைத்தான் நான் எப்போதும் செய்ய கற்றுக் கொண்டேன். உங்களால் அனைத்தையும் கட்டுப்படுத்த முடியாது. அனைத்து நாட்களும் உங்களுடையதாக இருக்காது. ஆனால் நீங்கள் சரியான செயல்முறைகளைப் பின்பற்றி உங்களை நம்பி சிறந்த செயல்பாடுகளைக் கொடுத்தால் அதுவே முக்கியமான விஷயமாகும். அதை செய்த பின் உங்களது வழியில் எந்த முடிவுகள் வந்தாலும்” பரவாயில்லை”

- Advertisement -

சச்சின் அட்வைஸ்:

“இப்படித்தான் விளையாட்டை நான் பார்க்கிறேன். என்னுடைய சிறந்த செயல்பாடுகளை நான் கொடுக்கிறேன். அதைத் தாண்டி வரும் முடிவுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன். 2013இல் சச்சின் டெண்டுல்கர் கொடுத்த ஆலோசனை டெக்னிக்கல் சம்பந்தமானது கிடையாது. நிறைய வீரர்களிடம் நான் நிறைய கற்றுள்ளேன். மும்பை அணிக்கு 19 வயதில் வந்த போது சச்சின் தன்னுடைய கடைசி வருடத்தில் விளையாடினார்”

இதையும் படிங்க: எனக்கு பயமில்ல அதுக்கு இதான் சாம்பிள்.. நைஸாக பிசிசிஐயை வலையில் விழ வைத்த இளம் வீரர் திக்வேஷ்

“அவரைப் போன்ற ஜாம்பவான்கள் விளையாடிய ஐபிஎல் தொடருக்கும் அண்டர்-19 அளவிலான தொடர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் முதல் போட்டியில் விளையாடும் முன் சச்சின் டெண்டுல்கர் எனக்கு “எதிரே நிற்கும் தனிநபரை பார்க்காதே. எதிரே நிற்கும் பேட்ஸ்மேனனுக்கு பவுலிங் செய். பெயருக்கு பவுலிங் செய்யாதே” என்று சொன்னார். அது எனக்கு நிறைய உதவியது. அந்த ஆலோசனை எனக்குள் நின்று கொண்டது. நான் அழுத்தத்தை சந்திக்கும் போதெல்லாம் எதிரே இருப்பவரும் சந்திப்பார். எனவே பெயர் உட்பட எதையும் அதிகமாக சிந்திக்காமல் சாதாரணப் போட்டியாக கருதி விளையாட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement