ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 4ஆம் தேதி தரம்சாலாவில் 54வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் பஞ்சாப் 37 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை தோற்கடித்தது. அதையும் சேர்த்து பஞ்சாப் 7வது வெற்றியை பெற்று ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பை நெருங்கியது. மறுபுறம் 6வது தோல்வியை சந்தித்த லக்னோ பிளே ஆஃப் செல்ல எஞ்சியுள்ள 3 போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வருடம் லக்னோ அணிக்காக இளம் இந்திய வீரர் திக்வேஷ் சிங் அறிமுகமாக களமிறங்கினார். அந்த வாய்ப்பில் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் பிரியான்ஸ் ஆர்யாவை அவர் தனது முதல் விக்கெட்டாக எடுத்தார். அப்போது பெவிலியன் நோக்கி நடந்த ஆர்யாவிடம் வம்படியாக ஓடிய திக்வேஷ் கையில் ஏதோ எழுதி விக்கெட்டை கொண்டாடினார்.
கொண்டாட்ட கதை:
அப்படி எதிரணி வீரருடன் உரசிக்கொண்டு விதிமுறையை மீறி கொண்டாடிய அவருக்கு பிசிசிஐ முதலில் 25% அபராதம் மற்றும் ஒரு கருப்பு புள்ளியை தண்டனையாக வழங்கியது. அந்த சூழ்நிலையில் மும்பைக்கு எதிரான அடுத்தப் போட்டியில் விக்கெட்டை எடுத்த போது மீண்டும் திக்வேஷ் அவ்வாறே கொண்டாடினார். இருப்பினும் இம்முறை பேட்ஸ்மேன் அருகே செல்லாத அவர் தாம் இருக்கும் இடத்திலேயே கையில் எழுதிக் கொண்டாடினார்.
அதைப் பார்த்த பிசிசிஐ தண்டனை வழங்கியும் திருந்தவில்லையா? என்ற வகையில் அவர் மீது கோபமடைந்தது. அதனால் அவருக்கு 50% அபராதம் மற்றும் 2 கருப்பு புள்ளிகளை பிசிசிஐ தண்டனையாக வழங்கியது. அதற்கடுத்ததாக கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் தம்முடைய ரோல் மாடல் சுனில் நரைன் விக்கெட்டை எடுத்த அவர் கைக்கு பதில் தரையில் எழுதிக் கொண்டாடினார்.
எனக்கு பயமில்ல:
அதைக் கவனித்த பிசிசிஐ “சரி இவர் வேண்டுமென்று கொண்டாடவில்லை. இது தான் இவருடைய கொண்டாட்டத்தின் ஸ்டைல் போல” என்ற வகையில் தண்டனை கொடுக்காமல் விட்டது. அப்போதிலிருந்து கடந்தப் போட்டி வரை திக்வேஷ் தரையில் எழுதியே விக்கெட்டை கொண்டாடி வந்தார். ஆனால் பஞ்சாப்புக்கு எதிராக பிரப்சிம்ரன், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டுகளை எடுத்த அவர் மீண்டும் “எனக்கு பயமில்லை. அதுக்கு இது தான் சாம்பிள்” என்ற வகையில் தம்முடைய கையில் எழுதி வெறித்தனமாக கொண்டாடினார்.
இதையும் படிங்க: சூர்யவன்சி மாதிரி இருக்காதன்னு சொல்லிருக்கேன்.. தோனியின் அந்த சின்ன பாராட்டே பெருசு.. ஆயுஷ் அப்பா பேட்டி
அதனால் பிசிசிஐ அவருக்கு அபராதம் விதிக்குமோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இருப்பினும் அவருக்கு பிசிசிஐ எந்த தண்டனையும் வழங்கவில்லை. மாறாக “இது தான் இவருடைய ஸ்டைல் போல” என்று பிசிசிஐ விட்டு விட்டதாக தெரிகிறது. இதிலிருந்து நைஸாக பிசிசிஐ திக்வேஷ் தனது வலையில் விழ வைத்துள்ளார் என்றே சொல்லலாம்.



