- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இதாங்க ஒற்றுமையான இந்திய அணி.. ரோஹித் சர்மா நீக்கப்பட்டது ஏன்? கேப்டன் பும்ரா பேட்டி

ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கும் அந்த தொடரின் நான்காவது போட்டி ஜனவரி 3ஆம் தேதி சிட்னி நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஜஸ்ப்ரித் பும்ரா இந்தியாவின் கேப்டனாக வந்தது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது.

இருப்பினும் இந்த தொடரின் முதல் போட்டியில் அவருடைய தலைமையில் வென்ற இந்தியா அதற்கடுத்த 3 போட்டிகளில் ரோஹித் தலைமையில் 2 தோல்விகளை சந்தித்தது. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை கிட்டத்தட்ட இந்தியா இழந்தது. அந்தத் தோல்விக்கு ரோஹித் சர்மா மிகவும் முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

விலகிய ரோஹித்:

ஏனெனில் பேட்டிங்கில் ஒரு அரை சதம் கூட அடிக்காத அவர் கேப்டனாகவும் சுமாராகவே செயல்பட்டார். அத்துடன் சமீபத்தில் அவருடைய தலைமையில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்து மோசமான சாதனை படைத்தது. அதன் காரணமாக ஓய்வு பெறுமாறு அவரை இந்திய ரசிகர்களே விமர்சித்து வந்தனர்.

அந்த சூழ்நிலையில் இந்திய அணியின் நலனுக்காக இப்போட்டியில் ரோஹித் தாமாக விலக முடிவெடுத்துள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின. குறிப்பாக 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பையும் இந்த கோப்பையை தக்க வைத்துக் கொள்ளவும் கடைசி போட்டியில் இந்தியா வென்றாக வேண்டிய நிலையில் உள்ளது. அதனால் ரோகித் இந்த முடிவை எடுத்துள்ளதாக செய்திகள் தெரிவித்தன.

- Advertisement -

சுயநலமற்ற முடிவு:

தற்போது அது உண்மையாகும் வகையில் அணியின் நலனுக்காக சுயநலமின்றி ரோகித் இந்த முடிவை எடுத்துள்ளதாக பும்ரா கூறினார். இது பற்றி டாஸ் வீசிய பின் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தப் போட்டியில் ஓய்வு எடுக்கும் முடிவை எடுத்து எங்களுடைய கேப்டன் அவருடைய தலைமை பண்பை காண்பித்துள்ளார். இது எங்களுடைய அணியில் நிறைய ஒற்றுமை இருப்பதை காண்பிக்கிறது”

இதையும் படிங்க: அவரா கேட்பரா? மேட்ச் வின்னர் அஸ்வினை இப்படி முத்திரை குத்தி ஓய்வு பெற வெச்சுட்டீங்களே.. கும்ப்ளே ஏமாற்றம்

“எங்கள் அணியில் எந்த சுயநலமும் இல்லை. அணியின் நலனுக்காக என்ன தேவையோ அதை நாங்கள் செய்வதற்காக பார்க்கிறோம்” என்று கூறினார். அதனால் ரோஹித் சர்மாவின் டெஸ்ட் கேரியர் கடந்த போட்டியுடன் முடிந்ததாக பார்க்கப்படுகிறது. அது அவருடைய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. இதை அடுத்து கடைசி போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -