
ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அந்தத் தொடர் 3 போட்டிகளின் முடிவில் 1 – 1* என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. 4வது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் பாக்ஸிங் டே ஸ்பெஷல் போட்டியாக துவங்க உள்ளது.
முன்னதாக இந்தத் தொடரில் இந்தியாவின் ஜஸ்ப்ரித் பும்ரா பவுலிங் துறையில் தனி ஒருவனாக ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்டு வெற்றிக்கு போராடி வருகிறார். தனித்துவமாக பவுலிங் செய்யும் அவர் இதுவரை 3 போட்டிகளில் 21* விக்கெட்டுகளை எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு மெகா சவாலை கொடுத்து வருகிறார். அவரை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் தடுமாறி வருகிறார்கள்.
இந்நிலையில் ஒருநாள், டி20 கிரிக்கெட்டை விட 5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் அனைத்து நாட்களிலும் அசத்த முடியாது என்று ஜஸ்ப்ரித் பும்ரா தெரிவித்துள்ளார். அதையும் தாண்டி புதுப்புது திட்டங்கள், தொடர் பயிற்சிகள், சோர்வடையாமல் மீண்டும் மீண்டும் கற்றதை செயல்படுத்தினால் அசத்த முடியுமென அவர் கூறியுள்ளார். இது பற்றி பிசிசிஐ இணையத்தில் பும்ரா பேசியது பின்வருமாறு.
“சில நாட்கள் பயிற்சியில் நீங்கள் களைப்படைவீர்கள். சில நேரங்களில் போட்டி நாட்களிலும் நீங்கள் களைப்படைவீர்கள். அதனால் சில நேரங்களில் உங்களை நீங்களே வலைப்பயிற்சியில் தள்ள வேண்டும். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினால் உங்களால் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்க முடியாது”
“எனக்கு என்ன வேலை செய்கிறது? எப்போது, எப்படி விக்கெட்டுகளை எடுக்கிறேன்? அதனால் நான் என்ன உணர்வை பெறுகிறேன் உடல் எவ்வாறு உணர்கிறது? போன்ற விஷயங்களை நான் மனதில் வைத்துக் கொள்வேன். அதை மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பார்ப்பேன். அனைத்து போட்டிகளும் நன்றாக செல்லாது. எனவே ஒவ்வொரு நாளும் நான் வித்தியாசமான பந்துகளை பயிற்சி எடுத்துப் பார்ப்பேன். அதை மீண்டும் மீண்டும் செய்யும் போது அது உங்களுடைய தசைகளில் நினைவாகி விடும்”
இதையும் படிங்க: இந்தியாவுக்காக அந்த கௌரவ வாய்ப்பு கிடைக்காததற்கு வருத்தப்படல.. எஞ்சாய் பண்ணிருப்பேன்.. அஸ்வின் பேட்டி
“ஆரம்பத்தில் நீங்கள் எதையாவது கற்றுக் கொள்ள விரும்பினால் அதை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும். லென்த் பந்தை நாம் ஏன் சிறப்பாக செயல்படுகிறோம். ஏனெனில் அதை நாம் அதிகமாக பயன்படுத்துகிறோம். 27 – 28 வயதுக்கு முன் நான் பணிச்சுமையை பற்றி சிந்திக்கவில்லை. ஆனால் தற்போது புத்திசாலித்தனமாக செயல்படுவதை சிந்திக்க வேண்டும். நீங்கள் விளையாட்டில் புதிதாக கற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் போதுமான அளவு இல்லையெனில் எப்படி கற்றுக்கொள்ள முடியும். ஏனெனில் இது எப்படி செல்ல வேண்டும் என்பதை முடிவெடுக்க வீடியோ கேம் கிடையாது. மீண்டும் மீண்டும் பயிற்சி செய்ய வேண்டும்” என்று கூறினார்.