- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஜெய்ஸ்வால், ஜடேஜாவை திட்டாதீங்க.. 3 கேட்ச் தவற விட இதான் காரணம்.. விதி 99இல் எழுதிருக்கு.. பும்ரா பேட்டி

லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து – இந்திய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. ஜூன் 20ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 471 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 101, ரிசப் பண்ட் 134, கேப்டன் 147 ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.

இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4, ஜோஸ் டாங் 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து கடுமையாக போராடியும் இந்தியாவின் போராட்ட பந்து வீச்சில் 465க்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஓலி போப் 106, ஹரி ப்ரூக் 99, பென் டக்கெட் 62 ரன்கள் எடுத்தார்கள். இந்தியாவுக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நாயகன் ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை எடுத்து 6 ரன்களை முன்னிலையாக பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

தவற விட்ட ஜெய்ஸ்வால்:

அதைத் தொடர்ந்து விளையாடும் இந்தியா 3வது நாள் முடிவில் 90/2 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 4, சாய் சுதர்சன் 30 ரன்களில் அவுட்டானார்கள். கேஎல் ராகுல் 47*, கேப்டன் சுப்மன் கில் 6* ரன்களுடன் களத்தில் உள்ள இந்திய அணி 96 ரன்கள் முன்னிலையாக பெற்றுள்ளது. முன்னதாக அப்போட்டியில் ஹரி ப்ரூக் 0 ரன்னில் பும்ராவிடம் அவுட்டான போதிலும் நோ-பால் காரணமாக தப்பித்தார்.

மேலும் பும்ராவின் பந்து வீச்சில் ஜடேஜா, ஜெய்ஸ்வால் ஆகியோர் 2 கேட்ச்களை தவற விட்டதைப் பயன்படுத்தத் தவறிய ஹரி ப்ரூக் 99 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். மறுபுறம் இப்போட்டியில் 2 நாளில் 3 கேட்ச்களை தவற விட்ட ஜெய்ஸ்வாலை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் திட்டினார்கள். இந்நிலையில் மைதானத்தில் இந்திய வீரர்கள் வேண்டுமென்றே கேட்ச்களை தவற விடவில்லை என்பதால் திட்ட வேண்டிய அவசியம் இல்லையென பும்ரா பெருமிதமாக பேசியுள்ளார்.

- Advertisement -

பும்ரா பெருமிதம்:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ப்ரூக் விதி 99இல் நிர்ணயிக்கப்பட்டது என்று நினைக்கிறேன். ஏனெனில் நோ-பாலுக்கு பின் அவர் சில முறை தவற விடப்பட்டார். அதைப் பயன்படுத்தி சிறப்பாக விளையாடிய அவருக்கு பாராட்டு கொடுக்க வேண்டும். அடுத்த இன்னிங்ஸில் அவருக்கு எதிராக இன்னும் நல்ல திட்டங்களை வகுப்போம். கேட்ச்கள் தவற விடப்பட்ட ஒரு நொடி நான் ஏமாற்றமடைந்தேன். ஆனால் இதெல்லாம் விளையாட்டின் ஒரு அங்கமாகும்”

இதையும் படிங்க: 5 இல்ல மொத்தம் 9 விக்கெட்ஸ் எடுத்த பும்ராவை வாழ்த்திய சச்சின்.. இந்திய அணி வீரர்களை சாடல்

“எங்களது புதிய வீரர்கள் கடினமாக உழைக்கிறார்கள். எனவே நான் கோபப்பட்டு அவர்கள் மீது அதிக அழுத்தத்தை உருவாக்க விரும்பவில்லை. யாரும் அதை வேண்டுமென்று செய்திருக்க மாட்டார்கள். இதிலிருந்து அவர்கள் பாடத்தைக் கற்றுக் கொள்வார்கள். சில நேரங்களில் ஈரப்பதம் கேட்ச் பிடிப்பதை கடினமாக்குகிறது. இருப்பினும் அது என்னுடைய ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்த விடாமல் நான் வேகமாக முன்னோக்கி நகர்கிறேன்” என்று கூறினார்.

- Advertisement -