போறபோக்க பார்த்தா அவர் ஒருத்தர் மட்டும் தான் 10 ஓவர் போடணும் போல – மட்டமான மும்பை ரசிகர்கள் கொந்தளிப்பு

- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 16-ஆம் தேதி 2 போட்டிகள் நடைபெற்ற நிலையில் மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 26-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய லக்னோ 20 ஓவர்களில் அதிரடியாக பேட்டிங் செய்து 199/4 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய குவின்டன் டி காக் மற்றும் கேப்டன் ராகுல் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 52 ரன்கள் குவித்து நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

இதில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 24 (13) ரன்களில் டீ காக் அவுட்டாக அடுத்து களமிறங்கிய மணிஷ் பாண்டேவுடன் ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் மும்பை பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தார். 2-வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியில் 6 பவுண்டரி உட்பட 38 (29) ரன்கள் எடுத்த மனிஷ் பாண்டே அவுட்டானார்.

- Advertisement -

ராகுல் அபரா சதம், மும்பை சொதப்பல்:
இருப்பினும் சுமாராக பந்துவீசிய மும்பை பவுலர்களை மறுபுறம் தொடர்ந்து பிரித்து மேய்ந்த கேஎல் ராகுல் சரவெடியாக பேட்டிங் செய்து அதிரடியாக ரன்களை குவித்தார். அவரை அவுட் செய்ய கேப்டன் ரோகித் சர்மா வகுத்த அனைத்து திட்டங்களும் தவிடுபொடியாக்கி கடைசி வரை அவுட்டாகாமல் சொல்லி அடித்த அவர் வெறும் 60 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் உட்பட சதமடித்து 103* ரன்கள் விளாசி கடைசி வரை அவுட்டாகாமல் அபார பினிஷிங் கொடுத்தார். மும்பை சார்பில் அதிகபட்சமாக பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதை தொடர்ந்து 200 என்ற பெரிய இலக்கை துரத்திய மும்பைக்கு அதன் கேப்டன் ரோகித் சர்மா பொறுப்பில்லாமல் 6 (7) ரன்களில் அவுட்டாக அடுத்து களமிறங்கிய 18 வயது இளம் தென்ஆப்பிரிக்கா வீரர் தேவால்டு ப்ரேவிஸ் முதல் பந்திலிருந்தே ரன் மழை பொழிந்தார். வெறும் 13 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 31 ரன்களை அதிரடியாக வெளுத்து வாங்கிய அவர் திடீரென அவுட்டானதும் அவருக்கு பின்னாடியே தடுமாற்ற ஆட்டத்தை வெளிப்படுத்திய மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிசான் 13 (17) ரன்களில் நடையை கட்டினார். இதனால் 57/3 என ஆரம்பத்திலேயே சொதப்பிய மும்பையின் தோல்வி கிட்டதட்ட உறுதியானது.

- Advertisement -

6-வது தோல்வி:
அந்த இக்கட்டான நிலைமையில் களமிறங்கிய நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் தனது பங்கிற்கு 3 பவுண்டரி உட்பட 37 (27) ரன்களும் இளம் வீரர் திலக் வர்மா 2 பவுண்டரியுடன் 26 (26) ரன்கள் எடுத்து நம்பிக்கை கொடுத்தாலும் முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தனர். அந்த நிலையில் காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட கைரன் பொல்லார்ட் அதிரடியாக 25 (14) ரன்களை எடுத்த போதிலும் பினிஷிங் செய்யத் தவறியதால் 20 ஓவர்களில் 181/9 ரன்களை மட்டுமே எடுத்த மும்பை பரிதாபமாக தோல்வி அடைந்தது. லக்னோ சார்பில் அதிகபட்சமாக பந்துவீச்சில் அசத்திய அவேஷ் கான் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதன் வாயிலாக பங்கேற்ற 6 போட்டிகளில் 4-வது வெற்றியை பதிவு செய்த லக்னோ 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என பெயரெடுத்த ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளிலும் அடுத்தடுத்து தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடுகிறது. அத்துடன் வெற்றிகரமான அணி என கருதப்படும் மும்பை வரலாற்றிலேயே முதல் முறையாக தனது முதல் 6 போட்டிகளில் தொடர்ச்சியாக 6 தோல்விகளை பதிவு செய்த பரிதாபத்திற்கு உள்ளாகியுள்ளது.

- Advertisement -

மட்டமான பவுலிங்:
இந்த அடுத்தடுத்த படுமோசமான தோல்விகளுக்கு அந்த அணியின் தரைமட்டமான பந்து வீச்சுதான் காரணம் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அந்த அணி பவுலர்களை வறுத்தெடுத்து வருகிறார்கள். ஏனெனில் இந்த போட்டியில் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா மட்டும் தனி ஒருவனை போல விக்கெட் எதுவும் எடுக்கவில்லை என்றாலும் 4 ஓவர்களை வீசி வெறும் 24 ரன்களை மட்டும் கொடுத்து 6.0 என்ற துல்லியமான எக்கனாமியில் எடுத்து அபாரமாக பந்து வீசினார்.

ஆனால் அவருக்கு கை கொடுக்கும் வகையில் வேறு எந்த ஒரு பலரும் துல்லியமாக பந்து வீசு தவறியதே மும்பையின் 6-வது தோல்விக்கு முக்கிய பங்காற்றியது. அதில் அந்த அணியின் வெளிநாட்டு பவுலர்களான டைமல் மில்ஸ் வெறும் 3 ஓவர்களில் 54 ரன்களையும் பின் ஆலன் 4 ஓவர்களில் 46 ரன்களையும் வாரி வழங்கினர். இதனால் “போறபோக்கை பார்த்தால் பும்ரா மட்டும் மும்பைக்கு 10 ஓவர்கள் வீசிவேண்டும் போல” என இதைப்பார்த்த நட்சத்திர தொகுப்பாளர் ஹர்ஷா போக்லே டிவிட்டரில் பதிவிட்டு மும்பை பந்துவீச்சை விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க : அட போங்கய்யா ! அசத்திய ராகுலின் லக்னோ, போராடி தோற்ற மும்பை – முதல் அணியாக வெளியேறும் பரிதாபம்

அத்துடன் வரலாற்றிலேயே இதுபோன்ற மோசமான மும்பை பந்துவீச்சு கூட்டணியை பார்த்ததே இல்லை என பல ரசிகர்களும் அந்த அணி பவுலர்களை சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.

Advertisement