சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்ற முடியும் தொடர்களுக்கு மத்தியில் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளுக்குமான தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகியுள்ள இந்த பட்டியலில் குறிப்பிட்ட சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
ஜஸ்ப்ரீத் பும்ராவின் இடத்திற்கு வந்துள்ள ஆபத்து :
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரானது தற்போது ஆஸ்திரேலிய நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இந்த ஆண்டின் இறுதியில் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் வெளியான தரவரிசை பட்டியலில் பந்துவீச்சாளர்களுக்கான லிஸ்டில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா 879 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ஆனாலும் அவரது இடத்தை இழக்கும் அபாயம் இரண்டு பேரால் ஏற்பட்டுள்ளது. அது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் மற்றும் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளரான நோமன் அலி ஆகிய இருவருமே தற்போது 843 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் வேளையில் இன்னும் 36 புள்ளிகள் பெற்றால் பும்ராவை அவர்கள் இருவரில் ஒருவர் வீழ்த்த வாய்ப்பு உள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி சார்பாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் மிட்சல் ஸ்டார்க் இதுவரை 4 போட்டிகளில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். அதே வேலையில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரான நோமன் அலி இதுவரை நடைபெற்றுள்ள 4 போட்டிகளில் 30 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இதையும் படிங்க : முதல் சர்வதேச வீரராக டி20 போட்டிகளில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய அபிஷேக் சர்மா – விவரம் இதோ
இவர்கள் இருவரில் ஒருவர் நிச்சயம் பும்ராவை முந்த அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை பொருத்தவரை இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் 867 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஹாரி புரூக் 846 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.



