இந்திய அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த பிறகு நிரந்தர துவக்க வீரராக இந்திய டி20 அணியில் விளையாடி வருகிறார். நடப்பு 2025 ஆம் ஆண்டில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் அடுத்தடுத்த தொடர்களில் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு சேர்த்து 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான துவக்க வீரராகவும் இடம் பிடித்துள்ளார்.
முதல் சர்வதேச வீரராக அபிஷேக் சர்மா நிகழ்த்திய சாதனை :
இந்த 2025 ஆம் ஆண்டு மட்டும் சர்வதேச டி20 போட்டிகள் மட்டுமின்றி, டொமஸ்டிக் போட்டிகள், ஐபிஎல் என அனைத்து வகையான டி20 போட்டிகளிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். இந்த ஆண்டு அபிஷேக் ஷர்மாவிற்கு மிகப் பிரமாதமான ஆண்டாக அமைந்ததோடு சேர்த்து பல்வேறு சாதனைகளையும் பெற்று தந்தது.
இந்நிலையில் 25 வயதான அவர் நடப்பு 2025 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் 1602 ரன்களை 200-க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து பிரமாண்டமான சாதனை ஒன்றினை அசத்தியுள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக 859 ரன்களையும், மற்றபடி டொமஸ்டிக் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் என 750-க்கும் மேற்பட்ட ரன்களை விளாசியுள்ளார்.
இப்படி ஒரு குறிப்பிட்ட காலர் ஆண்டில் அதிக டி20 ரன்களை 200+ ஸ்டிரைக் ரேட்டுடன் அடித்த முதல் சர்வதேச வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா நிகழ்த்தியுள்ளார். இந்த 2025 ஆம் ஆண்டு ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் 1602 ரன்கள் அடித்துள்ள அவர் அதனை 202.1 என்கிற பிரமாண்டமான ஸ்ட்ரைக் ரேட்டுடன் அடித்து அசத்தியுள்ளார்.
இப்படி இவருக்கு முன்னதாக எந்த ஒரு வீரரும் 1000 ரன்களுக்கு மேல் 200+ ஸ்ட்ரைக் கேட்டுடன் அடித்தது கிடையாது. அதேபோன்று சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஒரு ஆண்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் அபிஷேக் ஷர்மா நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் திரும்புவதில் ஏற்பட்டுள்ள தாமதம்.. பி.சி.சி.ஐ அதிகாரி – வெளியிட்ட தகவல்
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்துள்ள அபிஷேக் சர்மா தற்போது அந்த தொடருக்காக தீவிரமாக தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.



